IPL 2023: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி அரைசதம்.. மெகா ஸ்கோரை அடித்து ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணி வரலாற்று சாதனை

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 202 ரன்களை குவித்து, 203 ரன்கள் என்ற கடின இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்தது. 
 

yashasvi jaiswal half century helps rajasthan royals to register first ever 200 plus score in jaipur in ipl history

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று ஜெய்ப்பூரில் நடந்துவரும் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சிஎஸ்கே மற்றும் 3ம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 வலுவான அணிகள் ஆடிவருகின்றன.

ஜெய்ப்பூரில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டிரெண்ட் போல்ட்டுக்கு பதிலாக ஆடம் ஸாம்பா சேர்க்கப்பட்டார். சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மயர், த்ருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், ஆடம் ஸாம்பா, யுஸ்வேந்திர சாஹல்.

IPL 2023: தோனி நினைப்பதை அந்த பையன் செய்கிறான்.. அதனால் தோனி அவனை ரிமோட் கன்ட்ரோல் மாதிரி யூஸ் பண்றாரு..!

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்‌ஷனா, மதீஷா பதிரனா, ஆகாஷ் சிங்.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் சஞ்சு சாம்சன் 17 பந்தில் 17 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். ஆனால் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 43 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்தார். 

அதன்பின்னர் பின்வரிசையில் த்ருவ் ஜுரெல் அதிரடியாக ஆடி 15 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 34 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 13 பந்தில் 23 ரன்களையும் விளாச, 20 ஓவரில் 202 ரன்களை குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 203 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது.

PL 2023: டி20 கிரிக்கெட்டில் தனித்துவமான சாதனைகளை படைத்த விராட் கோலி

ஐபிஎல் வரலாற்றில் ஜெய்ப்பூர் மைதானத்தில் முதல் முறையாக 200 ரன்களுக்கு மேல் குவித்து ராஜஸ்தான் அணி சாதனை படைத்தது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios