IPL 2023: தோனி நினைப்பதை அந்த பையன் செய்கிறான்.. அதனால் தோனி அவனை ரிமோட் கன்ட்ரோல் மாதிரி யூஸ் பண்றாரு..!
ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியில் ஆடிவரும் இலங்கை இளம் ஃபாஸ்ட் பவுலர் மதீஷா பதிரனா அபாரமாக பந்துவீசிவரும் நிலையில், அவரை ரிமோட் கன்ட்ரோல் மாதிரி தோனி பயன்படுத்துவதாக முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் அபாரமாக விளையாடி 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது சிஎஸ்கே அணி.
தீபக் சாஹர், முகேஷ் சௌத்ரி ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் ஐபிஎல் 16வது சீசனிலிருந்து விலகியது சிஎஸ்கே அணிக்கு பெரிய அடியாக விழுந்தது. அதனால் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் பலவீனமானதாக பார்க்கப்பட்டது. ஆனால் துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் மற்றும் மதீஷா பதிரனா என இருக்கிற வீரர்களை சிறப்பாக வழிநடத்தி அவர்களிடமிருந்து அபாரமான ஆட்டத்தை வெளிக்கொண்டுவந்து வெற்றிகளை பறித்துவருகிறார் தோனி.
IPL 2023: RR vs CSK அணிகளின் உத்தேச ஆடும் லெவன்..! ராஜஸ்தான் அணியில் ஒரு அதிரடி மாற்றம்..!
அதிலும் குறிப்பாக மலிங்காவை போன்ற பவுலிங் ஆக்ஷனை கொண்ட இலங்கை இளம் ஃபாஸ்ட் பவுலர் மதீஷா பதிரனா டெத் ஓவர்களை அருமையாக வீசி, தோனியின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி அவரது நன்மதிப்பை பெற்றுவிட்டார். இந்த சீசனில் இதுவரை 3 போட்டிகளில் ஆடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எகானமி ரேட் 7.58 ஆகும். டெத் ஓவர்களில் அருமையாக வீசுகிறார் பதிரனா.
இந்நிலையில், பதிரனா குறித்து பேசிய முரளி கார்த்திக், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியில் தீக்ஷனாவிற்கு பதிலாக மிட்செல் சாண்ட்னெர் ஆடலாம். பதிரனா டெத் ஓவர்களை அருமையாக வீசுகிறார். தோனியின் வழிகாட்டுதலில் மிகச்சிறந்த பவுலராக வளர்ந்துவருகிறார் பதிரனா. தோனி நினைப்பதை போன்று பதிரனா பந்துவீசி அசத்துகிறார். அதனால் பதிரனாவை ரிமோட் கன்ட்ரோல் போல் தோனி பயன்படுத்துவதாக முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார்.