மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நிலையில், ஆடிய 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய ஆர்சிபி அணி கடைசி இடத்தில் உள்ளது.

முதல் 4 போட்டிகளிலும் தோற்ற ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி, முதல் வெற்றியை எதிர்நோக்கி இன்று டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்கிறது. டெல்லி கேபிடள்ஸ் அணி அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று வலுவான அணியாக திகழும் நிலையில், அந்த அணியை வீழ்த்துவது ஆர்சிபிக்கு எளிதான காரியமாக இருக்காது. கடும் சவாலாகவே இருக்கும்.

IND vs AUS: பசங்க பட்டைய கிளப்பிட்டாங்க.. ஆஸி., வீரர்கள் மூவருக்கு ராகுல் டிராவிட் புகழாரம்

மும்பை டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

டெல்லி கேபிடள்ஸ் அணி: 

மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வெர்மா, அலைஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மேரிஸன் கேப், டானியா பாட்டியா, ஜெஸ் ஜோனாசென், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ஷிகா பாண்டே, ராதா நோரிஸ். 

IND vs AUS: கடைசி டெஸ்ட் போட்டி டிரா.. இந்திய மண்ணில் தொடர்ச்சியாக 16வது டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை

ஆர்சிபி அணி:

ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), சோஃபி டிவைன், எலைஸ் பெர்ரி, ஹீதர் நைட், ரிச்சா கோஷ்ஹ், ஷ்ரேயங்கா பாட்டீல், திஷா கசட், மேகன் ஸ்கட், ஆஷா சோபனா, ரேணுகா சிங், பிரீத்தி போஸ்.