WPL 2023: கோப்பை யாருக்கு..? ஃபைனலில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடள்ஸ் பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்
மகளிர் பிரீமியர் லீக் ஃபைனலில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் இன்றுடன் முடிகிறது. லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேபிடள்ஸ் அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியது.
புள்ளி பட்டியலில் 2 மற்றும் 3ம் இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் எலிமினேட்டரில் மோதின. அந்த போட்டியில் வெற்றி பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
ஒரே இன்னிங்ஸில் அந்த பையன் என் கெரியரை முடிச்சு வச்சுட்டான் - ஷிகர் தவான்
மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் ஃபைனலில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வெர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மேரிஸன் கேப், அலைஸ் கேப்ஸி, ஜெஸ் ஜோனாசென், அருந்ததி ரெட்டி, டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராதா யாதவ், ஷிகா பாண்டே, மின்னு மனி.
மும்பை இந்தியன்ஸ் அணி:
யஸ்டிகா பாடியா, ஹைலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன், மெலி கெர், பூஜா வஸ்ட்ராகர், இசி வாங், அமன்ஜோத் கௌர், ஹுமைரா காஸி, ஜிந்தாமனி கலிடா, சாய்கா இஷாக்.