Asianet News TamilAsianet News Tamil

WPL 2023: வெறும் 9 ஓவரில் இலக்கை அடித்து மும்பை அணியை 2ம் இடத்திற்கு தள்ளி முதலிடம் பிடித்தது டெல்லி அணி

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முதலிடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்தது டெல்லி கேபிடள்ஸ் அணி.
 

wpl 2023 delhi capitals beat mumbai indians by 9 wickets and goes to first place in points table
Author
First Published Mar 20, 2023, 10:35 PM IST

மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. புள்ளி பட்டியலில் டாப் 3 இடங்களில் உள்ள மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய 3 அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. ஆர்சிபி மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் தொடரைவிட்டு வெளியேறிவிட்டன.

புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் 2ம் இடத்தில் இருந்த டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 2 அணிகளும் மோதிய போட்டி மும்பை டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணிகள் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வெர்மா, அலைஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மேரிஸன் கேப், டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஜெஸ் ஜோனாசென், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, பூனம் யாதவ்.

இந்திய பேட்ஸ்மேன்களின் உண்மையான பிரச்னையை ஒப்புக்கொள்ள மறுக்கும் ரோஹித் சர்மா..!

மும்பை இந்தியன்ஸ் அணி: 

ஹைலி மேத்யூஸ், யஸ்டிகா பாட்டியா, நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), அமெலியா கெர், இசி வாங், பூஜா வஸ்ட்ராகர், அமன்ஜோத் கௌர், ஹுமைரா காஸி, ஜிந்தாமனி கலிடா, சாய்கா இஷாக்.

முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் 3 வீராங்கனைகளான யஸ்டிகா பாட்டியா(1), ஹைலி மேத்யூஸ்(5), நாட் ஸ்கிவர் பிரண்ட் (0) ஆகிய மூவரும் ஏமாற்றமளித்தனர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 23 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் பூஜா வஸ்ட்ராகர் 26 ரன்களும், இசி வாங் 23 ரன்களும், அமன்ஜோத் கௌர் 19 ரன்களும் அடித்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த வீராங்கனையும் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் 20 ஓவரில் வெறும் 109 ரன்கள் மட்டுமே அடித்தது. 

டெல்லி கேபிடள்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய மேரிஸன் கேப், ஷிகா பாண்டே, ஜெஸ் ஜோனாசென் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

110 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வெர்மா அதிரடியாக ஆடி 15 பந்தில் 33 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் 3ம் வரிசையில் இறங்கிய அலைஸ் கேப்ஸி சிக்ஸர் மழை பொழிந்தார். 17 பந்தில் 5 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் விளாசினார். அலைஸ் கேப்ஸியும் மற்றொரு தொடக்க வீராங்கனையுமான மெக் லானிங்கும் (32) இணைந்து 9 ஓவரில் இலக்கை அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடள்ஸை அபார வெற்றி பெற செய்தனர்.

யார் பேச்சையும் கேட்காத.. 160 கிமீ வேகத்தில் வீசி மிரட்டு..! உம்ரான் மாலிக்கை உசுப்பேற்றும் இஷாந்த் சர்மா

இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸை புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்தது டெல்லி கேபிடள்ஸ் அணி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios