Asianet News TamilAsianet News Tamil

மகளிர் டி20 உலக கோப்பை:தென்னாப்பிரிக்க ஓபனர்ஸ் லாரா, பிரிட்ஸ் அரைசதம்! அரையிறுதியில் இங்கி.,க்கு சவாலான இலக்கு

மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரில் 164 ரன்களை குவித்து 165 ரன்கள் என்ற சவாலான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

womens t20 world cup 2023 south africa set challenging target to england in semi final
Author
First Published Feb 24, 2023, 8:24 PM IST

மகளிர் டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையே இன்று நடந்துவரும் 2வது அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

டான் பிராட்மேனை விட அதிக சராசரி.. டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ஹாரி ப்ரூக்

தென்னாப்பிரிக்க மகளிர் அணி:

லாரா வோல்வார்ட், டாஸ்மின் பிரிட்ஸ், மாரிஸான் கேப், சுன் லூஸ் (கேப்டன்), க்ளோ ட்ரயான், நாடின் டி கிளெர்க், அனெகெ பாஷ், சினாலோ ஜாஃப்டா (விக்கெட் கீப்பர்), ஷப்னிம் இஸ்மாயில், அயபோங்கா காகா, நோன்குலுலெகோ லாபா.

இங்கிலாந்து மகளிர் அணி:

டேனியல் வியாட், சோஃபியா டன்க்லி, அலைஸ் கேப்ஸி, நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹீதர் நைட் (கேப்டன்), எமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), சோஃபி எக்லிஸ்டோன், கேத்ரின் ஸ்கிவர் பிரண்ட், சார்லோட் டீன், சாரா க்ளென், லாரென் பெல்.

முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் லாரா மற்றும் பிரிட்ஸ் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 13.4 ஓவரில் 96 ரன்களை குவித்தனர். லாரா வோல்வார்ட் 44 பந்தில் 53 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 55 பந்தில் 68 ரன்கள் அடித்து பிரிட்ஸும் ஆட்டமிழந்தார். அவர்கள் இருவரைத்தவிர மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. அதன்பின்னர் இறங்கிய மிடில் ஆர்டர் வீராங்கனைகள் சோபிக்காததால் 20 ஓவரில் 164 ரன்கள் மட்டுமே தென்னாப்பிரிக்க அணியால் அடிக்க முடிந்தது.

IND vs AUS:எப்பேர்ப்பட்ட பிளேயர் ராகுல்; அப்படிலாம் ஈசியா தூக்கமுடியாது! கேஎல் ராகுலுக்கு கம்பீர் ஆதரவுக்குரல்

நாக் அவுட் போட்டியான அரையிறுதியில் இதுவே சவாலான இலக்குதான். ஆனால் மற்ற வீராங்கனைகள் நன்றாக ஆடியிருந்தால் இன்னும் பெரிய ஸ்கோரை தென்னாப்பிரிக்க அணி அடித்திருக்கும். 165 ரன்கள் என்ற சவாலான இலக்கை இங்கிலாந்து மகளிர் அணி விரட்டிவருகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios