Asianet News TamilAsianet News Tamil

மகளிர் டி20 உலக கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

மகளிர் டி20 உலக கோப்பையில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டி.எல்.எஸ் முறைப்படி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
 

womens t20 world cup 2023 india beat ireland by 5 runs and qualifies to semi final
Author
First Published Feb 20, 2023, 10:32 PM IST

மகளிர் டி20 உலக கோப்பையில் இந்தியா - அயர்லாந்து இடையேயான போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய மகளிர் அணி:

ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வெர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தேவிகா வைத்யா, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், ஷிகா பாண்டே, ராஜேஷ்வரி கெய்க்வாட், ரேணுகா சிங்.

IND vs AUS: கேஎல் ராகுல் துணை கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னணி..! ஹர்பஜன் சிங் அதிரடி

அயர்லாந்து மகளிர் அணி:

எமி ஹண்டர், கேபி லெவிஸ், ஆர்லா பிரெண்டெர்காஸ்ட், எய்மீர் ரிச்சர்ட்ஸன், லூயிஸ் லிட்டில், லாரா டிலானி (கேப்டன்), அர்லென் கெல்லி, மேரி வால்ட்ரான் (விக்கெட் கீப்பர்), லீ பால், சாரா முர்ரே, ஜார்ஜினா டெம்ப்சி.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ஒருமுனையில் ஷஃபாலி வெர்மா (24), ஹர்மன்ப்ரீத் கௌர்(13), ரிச்சா கோஷ் (0), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (19) ஆகியோர் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அரைசதம் அடித்தார். அபாரமாக ஆடிய ஸ்மிரிதி மந்தனா 56 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்தார். ஸ்மிரிதி மந்தனாவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 155 ரன்களை குவித்த இந்திய அணி, 156 ரன்கள் என்ற சவாலான இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்தது.

IND vs AUS: அடுத்தடுத்த தோல்விகள்.. ஆஸ்திரேலிய அணி செய்த தவறுகளை லிஸ்ட் போட்டு அடித்த மைக்கேல் கிளார்க்

156 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி, 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. அதன்பின்னர் மழை நிற்காததால் ஆட்டம் அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. டி.எல்.எஸ் முறைப்படி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios