இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன்சியிலிருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டதன் பின்னணியை ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் இந்தூர் மற்றும் அகமதாபாத்தில் நடக்கின்றன.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க வீரர் கேஎல் ராகுல் படுமோசமாக சொதப்பினார். கடைசியாக ஆடிய ஒருநாள் தொடரில் ஒரு இரட்டை சதம் மற்றும் சதமடித்து டாப் ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக இறக்காமல் கேஎல் ராகுலை தொடக்க வீரராக இறக்கியதே விமர்சனத்துக்குள்ளானது.

தன் மீதான விமர்சனங்களுக்கு உரமூட்டும் வகையில், முதல் டெஸ்ட்டில் 20 ரன் மட்டுமே அடித்த நிலையில், 2வது டெஸ்ட்டிலும் 17 மற்றும் 1 ரன் அடித்து சொதப்பினார். 

IND vs AUS: அடுத்தடுத்த தோல்விகள்.. ஆஸ்திரேலிய அணி செய்த தவறுகளை லிஸ்ட் போட்டு அடித்த மைக்கேல் கிளார்க்

ராகுல் தொடர்ச்சியாக சொதப்பினாலும், அவருக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்பளிப்பது விமர்சனத்துக்குள்ளானது. இந்திய அணி நிர்வாகம் மீது விமர்சனங்கள் எழுந்தன. டெஸ்ட் அணியின் துணை கேப்டன் கேஎல் ராகுலை பென்ச்சில் உட்காரவைக்கமுடியாது என்பதால் அவரை ஆடும் லெவனில் சேர்த்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது. 

முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் துணை கேப்டனாக செயல்பட்ட ராகுல், துணை கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த தொடர் தொடங்குவதற்கு முன் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி தான் அறிவிக்கப்பட்டது. கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த இந்திய டெஸ்ட் அணியில் துணை கேப்டன்சியிலிருந்து ராகுல் நீக்கப்பட்டுள்ளார்.

ராகுல் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் துணை கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது அவருக்கு ஆடும் லெவனில் இடம் இல்லை என்பதையே உணர்த்துகிறது. அதைத்தான் ஹர்பஜன் சிங்கும் கூறியுள்ளார்.

உங்க ஊர்ல வச்சு அடிக்கிறீங்கள்ல.. இப்ப வாங்குங்கடா! இந்திய மண்ணில் ஆஸி.,யால் ஜெயிக்க முடியாது - ரமீஸ் ராஜா

இதுகுறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்துடன் ஷுப்மன் கில் தொடக்க வீரராக இறக்கப்படவுள்ளார். அதனால் தான் கேஎல் ராகுல் துணை கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கில் டாப் ஃபார்மில் உள்ளார். கில் சூப்பர் ஹீரோவாகிவிட்டார். எனவே அவருக்கு கண்டிப்பாக ஆடும் லெவனில் இடம் கிடைக்கும். ராகுல் மிகச்சிறந்த வீரர் தான். ஆனால் இப்போதுஅவரது கடினமான காலத்தில் உள்ளார். அவர் சிறந்த வீரர் தான். அவரது நம்பர் தான் மோசமாக உள்ளது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.