மகளிர் டி20 உலக கோப்பையில் அயர்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
மகளிர் டி20 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடக்கிறது. க்ரூப் 1ல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய 5 அணிகளும் உள்ளன. க்ரூப் 2ல் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய 5 அணிகளும் இடம்பெற்றுள்ளன.
மகளிர் டி20 உலக கோப்பையில் இன்றைய போட்டியில் க்ரூப் 2ல் இடம்பெற்றுள்ள இங்கிலாந்தும் அயர்லாந்தும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
IND vs AUS: முதல் டெஸ்ட்டுக்கு முன்பே கணித்த பாண்டிங்.. கண்டுக்காம தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா
இங்கிலாந்து அணி:
டேனியெல் வியாட், சோஃபியா டன்க்லி, அலைஸ் கேப்ஸி, நாட் ஸ்கைவர் பிரண்ட், ஹீதர் நைட் (கேப்டன்), எமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), சோஃபி எக்லிஸ்டோன், சார்லோட்டி டீன், கேத்ரின் ஸ்கைவர் பிரண்ட், சாரா க்ளென், லாரென் பெல்.
முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணியில் தொடக்க வீராங்கனை கேபி லூயிஸ் தான் அதிகபட்சமாக 36 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு அவுட்டாக, அந்த அணி 18.2 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
WPL 2023 Auction: அதிகமான தொகைக்கு விலைபோன டாப் 10 வீராங்கனைகள்
106 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியிலும் அலைஸ் கேப்ஸியை தவிர வேறு எந்த வீராங்கனையும் சரியாக ஆடவில்லை. சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த அலைஸ் கேப்ஸி 51 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற வீராங்கனைகள் சரியாக ஆடாவிட்டாலும், இலக்கு எளிதானது என்பதாலும், அதில் பாதியை அலைஸ் கேப்ஸியே அடித்துவிட்டார் என்பதாலும் 15வது ஓவரில் இலக்கை அடித்து இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.
