IND vs AUS: முதல் டெஸ்ட்டுக்கு முன்பே கணித்த பாண்டிங்.. கண்டுக்காம தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா
டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு ரவீந்திர ஜடேஜா தான் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று முதல் டெஸ்ட்டுக்கு முன்பாகவே ரிக்கி பாண்டிங் கூறியிருந்த நிலையில், அது அப்படியே நடந்தது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்த ஜடேஜா, முதல் டெஸ்ட்டில் கம்பேக் கொடுத்தார். தனது கம்பேக் போட்டியில் அபாரமாக பந்துவீசிய ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
WPL 2023 Auction: அதிகமான தொகைக்கு விலைபோன டாப் 10 வீராங்கனைகள்
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை குவித்தது. ரோஹித் சர்மா 120 ரன்களை குவித்தார். ஜடேஜா 70 ரன்களையும், அக்ஸர் படேல் 84 ரன்களையும் அடிக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை குவித்து 223 ரன்கள் முன்னிலை பெற்றது. 223 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அபாரமாக செயல்பட்டு ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்த டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக, ரஞ்சி தொடரில் சௌராஷ்டிரா அணிக்காக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஆடினார். அந்த போட்டியில் அபாரமாக பந்துவீசி 11 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
அதை மனதில் வைத்து, முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாகவே, ரவீந்திர ஜடேஜா தான் ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார். அதேபோலவே நடந்தது.
WPL 2023 ஏலத்திற்கு பின் பயங்கரமா பங்கம் செய்யப்படும் பாபர் அசாம் & பாகிஸ்தான் சூப்பர் லீக்
முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் ஜடேஜா குறித்து பேசிய பாண்டிங், ரஞ்சி தொடரில் ஜடேஜா ஆடிய அவரது கம்பேக் போட்டியை பார்த்தேன். அபாரமாக பந்துவீசி 11 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அவர் தான் கொடுங்கனவாக இருக்கப்போகிறார். ஜடேஜா வேகமாக வீசுகிறார். எனவே இதுமாதிரியான ஆடுகளங்களில் அசத்திவிடுவார். அதுமட்டுமல்லாது அவர் தொடர்ச்சியாக ஸ்டம்ப் லைனில் வீசுகிறார். அது பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். குறிப்பாக வலது கை பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். ஒரு பந்து திரும்பும்; மற்றொரு பந்து நேராக வரும். எனவே அவரது பவுலிங்கை எதிர்கொள்வது கடினமாக இருக்கும் என்று பாண்டிங் தெரிவித்திருந்தார். அதேபோலத்தான் அந்த போட்டியில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.