WPL 2023 ஏலத்திற்கு பின் பயங்கரமா பங்கம் செய்யப்படும் பாபர் அசாம் & பாகிஸ்தான் சூப்பர் லீக்
மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் வீராங்கனைகள் ஏலம்போன தொகையை விட பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் ஊதியமாக வாங்கும் தொகை குறைவு என்பதால், பாகிஸ்தான் வீரர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்படுகின்றனர்.
மகளிர் பிரீமியர் லீக் தொடர் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் முதல் சீசனில் ஆடுகின்றன. இந்த சீசனுக்கான ஏலம் மும்பையில் நடந்துவருகிறது.
மகளிர் பிரீமியர் லீக்கிற்கான ஏலத்தில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அதிகபட்சமாக ரூ.3.4 கோடிக்கு விலைபோனார். ஸ்மிரிதி மந்தனாவை ரூ.3.4 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னெர், இங்கிலாந்து வீராங்கனை நாட் ஸ்கைவர் பிரண்ட் ஆகியோர் ரூ.3.2 கோடி என்ற 2வது அதிகபட்ச தொகைக்கு விலைபோனார்கள்.
மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் வீராங்கனைகள் நல்ல தொகைக்கு விலைபோனார்கள். உலகின் பணக்கார மற்றும் பவர்ஃபுல்லான டி20 லீக் தொடர் ஐபிஎல் தான். ஆனால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள், ஐபிஎல்லை மட்டம்தட்டும் முனைப்பில் ஐபிஎல்லுக்கு நிகரான/ஐபிஎல்லை விட சிறந்த டி20 லீக் தொடர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தான் என்று அவ்வப்போது பிதற்றி, தங்கள் வயிற்றெரிச்சலை தீர்த்துகொண்டு வந்தனர்.
IND vs AUS: அவருக்கு கடைசியா ஒரு சான்ஸ் கொடுங்க.. சரியா வரலைனா தூக்கிருங்க..! கவாஸ்கர் கருத்து
இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக்கிற்கான ஏலத்தில் வீராங்கனைகளுக்கு கொடுக்கப்பட்ட தொகையை விட பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பாகிஸ்தானின் முன்னணி வீரரான பாபர் அசாம் பெறும் தொகை மிகக்குறைவு. அதை சுட்டிக்காட்டி கிரிக்கெட் ரசிகர்கள் பாபர் அசாம், பாகிஸ்தான் கிரிக்கெட் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை பயங்கரமாக கிண்டலடித்து வருகின்றனர்.
ஸ்மிரிதி மந்தனா - ரூ.3.4 கோடி (பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ரூ.10.2 கோடி)
பாபர் அசாம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கி பெறும் சம்பளம் - ரூ.1.39 கோடி (பாகிஸ்தான் மதிப்பில் ரூ.4.59 கோடி)
இதை சுட்டிக்காட்டி டுவிட்டரில் ரசிகர்கள் கிண்டலடித்துவருகின்றனர்.