ஆகாஷ் தீப் யார்? இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது ஏன்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இளம் வீரரான ஆகாஷ் தீப் இடம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்த இந்திய நிலையில் இந்திய 1-1 என்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமன் செய்திருக்கிறது. இதையடுத்து எஞ்சிஅ 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், சீனியர் வீரரான விரட் கோலி தனிப்பட்ட காரணத்திற்காக இடம் பெறவில்லை. கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் காயங்கள் காரணமாக விலகினர்.
Lucknow Super Giants, Shamar Joseph: ஷமார் ஜோசப்பை ரூ.3 கோடிக்கு தட்டி தூக்கிய லக்னோ!
முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு வலி காயம் காரணமாக எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் தான் அவருக்குப் பதிலாக ஆகாஷ் தீப் அணியில் இடம் பெற்றார். முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்ற ஆகாஷ் தீப், இதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.
13 வருட டெஸ்ட் வாழ்க்கையில் முதல் முறையாக முழு தொடரையும் இழந்த விராட் கோலி!
ஆனால், அவருக்கு பிளேயிங் 11ல் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணிக்காக விளையாடினார். இதில், நடந்த 3 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலேயும் 2 முறை 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் திறமை கொண்டிருக்கிறார். இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பெங்கால் அணிக்காக விளையாடி வந்த ஆகாஷ் தீப், இதுவரையில் 29 போட்டிகளில் விளையாடி 103 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முகேஷ் குமாரும் பெங்கால் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடக்கும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் பிளேயிங் 11ல் ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக ஷர்பராஸ் கான் இடம் பெறுவார் என்றும், ஆகாஷ் தீப்பிற்கு 4ஆவது போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையென்றால் 3ஆவது போட்டியில் முகேஷ் குமாருப் பதிலாக இடம் பெறலாம் என்று தெரிகிறது.