Lucknow Super Giants, Shamar Joseph: ஷமார் ஜோசப்பை ரூ.3 கோடிக்கு தட்டி தூக்கிய லக்னோ!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் வெஸ்ட் இண்டீஸ் வீரரான ஷமார் ஜோசப் ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வரலாற்று வெற்றிக்கு வித்திட்டவர் ஷமார் ஜோசப். கப்பா டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை தனது அபாரமான பந்து வீச்சால் தோற்கடித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை வரலாற்று வெற்றி பெறச் செய்தார்.இந்தப் போட்டியில் 100 ஓவர்கள் வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில், தொடர் நாயகன், ஆட்டநாயகன் விருதும் வென்றார். 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரு அணிகளும் தலா 1-1 என்று கைப்பற்றின.
13 வருட டெஸ்ட் வாழ்க்கையில் முதல் முறையாக முழு தொடரையும் இழந்த விராட் கோலி!
ஆனால், துபாயில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஷமார் ஏலம் எடுக்கப்படவில்லை. இதையடுத்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய நிலையில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ரூ. 3 கோடிக்கு ஷமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். லக்னோ அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட், ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதைத் தொடர்ந்து ஷமார் ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.