Asia Cup 2023: ஆசிய கோப்பையில் ஆதிக்கம் செலுத்தியது யார்? இந்தியாவா? பாகிஸ்தானா?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 3ஆவது லீக் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.
கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா இதுவரையில் 7 முறை கைப்பற்றியுள்ளது. இலங்கை 6 முறை சாம்பியனாகியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் 2 முறை மட்டுமே டிராபியை கைப்பற்றியிருக்கிறது. இந்த நிலையில், 16ஆவது சீசனுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த 30 ஆம் தேதி தொடங்கியது. இதில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் பலம் வாய்ந்த பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
India vs Pakistan: கிளியராக இருக்கும் வானம்: டாஸ் திட்டமிட்டபடி போடப்படுமா?
இதையடுத்து இன்று தனது 2ஆவது போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியானது இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் தொடங்குகிறது. ஆனால், இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 132 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இந்தியா 55 ஒரு நாள் போட்டிகளிலும், பாகிஸ்தான் 73 ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 4 போட்டிகளுக்கு முடிவு எட்டவில்லை. கடைசியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி 2019 ஆம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்தது.
இந்தியா விளையாடும் பெங்களூரு மற்றும் கொல்கத்தா போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்!
இதுவே ஆசிய கோப்பையில் இரு அணிகளும் மோதிய 13 ஒரு நாள் போட்டிகளில், இந்தியா 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் 5 போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த கடைசியாக நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இதுவரையில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்கள்: பாகிஸ்தானுக்கு எதிராக
இதுவரையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்களின் பட்டியலில் அனில் கும்ப்ளே முதலிடத்தில் உள்ளார். அவர் 4 போட்டிகளில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.
அர்ஷாத் ஆயுப் – ஒரு போட்டியில் 5 விக்கெட்
புவனேஷ்வர் குமார் – 3 போட்டிகளில் 5 விக்கெட்
பாகிஸ்தான்:
சையது அஜ்மல் – 4 போட்டிகளில் 8 விக்கெட்
அப்துல் ரஸாக் – 3 போட்டிகளில் 6 விக்கெட்
ஆகீப் ஜாவெத் – 2 போட்டிகளில் 5 விக்கெட்
ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் இடையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் – ஒரு நாள் போட்டி
ரோகித் சர்மா – 7 போட்டிகளில் 367 ரன்கள்
விராட் கோலி – 3 போட்டிகளில் 206 ரன்கள்
விரேந்திர சேவாக் – 4 போட்டிகளில் 179 ரன்கள்
பாகிஸ்தான்
சோயிப் மாலிக் – 5 போட்டிகளில் 428 ரன்கள்
யூனிஸ் கான் – 4 போட்டிகளில் 238 ரன்கள்
முகமது ஹபீஸ் – 2 போட்டிகளில் 180 ரன்கள்