இந்தியா விளையாடும் பெங்களூரு மற்றும் கொல்கத்தா போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்!
பெங்களூரு மற்றும் கொல்கத்தா மைதானத்தில் இந்தியா விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விற்பனையானது இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா நடத்தும் உலகக் கோப்பை 2023 தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. 2ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் 11 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து மிக முக்கியமான போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இதையடுத்து 19ஆம் தேதி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், தான், பெங்களூரு மற்றும் கொல்கத்தா மைதானங்களில் நடக்கும் இந்திய அணிக்கான டிக்கெட் விற்பனையானது இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
Rinku Singh: ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து சூப்பர் ஓவர் ஹீரோவான ரிங்கு சிங்!
இந்தியாவின் பயிற்சி போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் இந்தியா, அதற்கு முன்னதாக கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் 2 பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறது.
உலகக் கோப்பை 2023 மாஸ்டர்கார்டு பயனர்களுக்கான டிக்கெட் அட்டவணை மற்றும் இந்திய போட்டிகள்:
ஆகஸ்ட் 24 அன்று மாலை 6 மணி: மாஸ்டர்கார்டு டிக்கெட் விற்பனை - அனைத்து இந்தியா அல்லாத போட்டிகள், பயிற்சி விளையாட்டுகள் தவிர (இப்போது நேரலையில்)
ஆகஸ்ட் 29 மாலை 6 மணி: மாஸ்டர்கார்டு டிக்கெட் விற்பனை – பயிற்சி விளையாட்டுகள் தவிர்த்து இந்திய போட்டிகள்
செப்டம்பர் 14 அன்று மாலை 6 மணி முதல் இந்திய நேரப்படி: மாஸ்டர்கார்டு டிக்கெட் விற்பனை - அரையிறுதி மற்றும் இறுதி
மற்ற அனைத்து பயனர்களுக்கும், இந்தியாவின் போட்டிகளுக்கான உலகக் கோப்பை 2023 டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 30 முதல் பல்வேறு கட்டங்களாகத் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி,
இந்தியப் போட்டிகள் கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம்: ஆகஸ்ட் 30 அன்று இரவு 8 மணி முதல் டிக்கெட் விற்கப்பட்டது.
இந்தியாவின் போட்டிகள் சென்னை, டெல்லி மற்றும் புனே: ஆகஸ்ட் 31 அன்று இரவு 8 மணி முதல் டிக்கெட் விற்கப்பட்டது.
இந்தியா போட்டிகள் தர்மசாலா, லக்னோ மற்றும் மும்பை: செப்டம்பர் 1 ஆம் தேதி இரவு 8 மணி முதல் டிக்கெட் விற்கப்பட்டது.
பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் இந்திய போட்டிகள்: செப்டம்பர் 2 ஆம் தேதி இரவு 8 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
இந்தியப் போட்டி அகமதாபாத்தில்: செப்டம்பர் 3 ஆம் தேதி இரவு 8 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கும்.
வரும் நவம்பர் 5 ஆம் தேதி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், நவம்பர் 12 ஆம் தேதி இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியானது பெங்களூரு சின்னச்சாமி மைதானத்திலும் நடக்கிறது. இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையானது இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ரசிகர்கள் tickets.cricketworldcup.com மற்றும் BookMyShowவிலும் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்.
India vs Pakistan: பாகிஸ்தானை தோற்கடிக்க இதை செய்தால் போதும்: முன்னாள் பாக், வீரர் வஹாப் ரியாஸ்!