India vs Pakistan: பாகிஸ்தானை தோற்கடிக்க இதை செய்தால் போதும்: முன்னாள் பாக், வீரர் வஹாப் ரியாஸ்!
பாகிஸ்தானை எப்படி தோற்கடிக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் வீரர் வஹாப் ரியாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. கடந்த 30 ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, நேற்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இதில், இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
India vs Pakistan: சஞ்சு சாம்சனால் விளையாட முடியாது: கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது?
இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி நாளை பல்லேகலே மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியின் போது மழை பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தப் போட்டியில் 8ஆவது இடத்தில் ஆல்ரவுண்டர் விளையாட வேண்டுமா இல்லை ஒரு பவுலரை விளையாட வைக்க வேண்டுமா என்பது இந்திய அணிக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது.
இந்திய அணிக்கு 8ஆவது இடத்தில் இருக்கும் இரண்டு பவுலிங் ஆல் ரவுண்டர்கள் என்றால் அது ஷர்துல் தாக்கூர் மற்றும் அக்ஷர் படேல் மட்டுமே. இந்த நிலையில் தான் பாகிஸ்தானை எப்படி வீழ்த்த வேண்டும் என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே உற்சாகமாகத்தான் இருக்கும்.
விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரான குஷேஷ்!
நான் 10 ஓவர்கள் பந்து வீசக் கூடிய 5 பந்து வீச்சாளர்களுடன் தான் செல்வேன். உங்களுக்கு 6ஆவது பந்து வீச்சாளர் தேவை என்றால், பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப், ஜடேஜா ஆகியோருடன் அக்ஷர் படேலையும் இடம் பெறச் செய்யலாம். கண்டி ஆடுகளத்தில் பனிப்பொழிவு இருக்கும். பனிப்பொழிவு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். முதலில் பேட்டிங் செய்யும் அணியை விட 2ஆவதாக பேட்டிங் ஆடும் அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று அவர் கூறியுள்ளார்.
டைமண்ட் லீக் தடகள போட்டி : ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா 2ஆவது இடம்!