India vs Pakistan: சஞ்சு சாம்சனால் விளையாட முடியாது: கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது?
பாகிஸ்தானுக்கு எதிராக நாளை நடக்க உள்ள போட்டியில் சஞ்சு சாம்சனால் விளையாட முடியாது என்று கிரிக்கெட் விதி கூறுகிறது.
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து தொடரை முடித்துக் கொண்டு தற்போது ஆசிய கோப்பை 2023 தொடருக்காக இலங்கைக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து 16ஆவது எடிஷனுக்கான ஆசிய கோப்பை தொடரை நடத்துகின்றன. ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 2ஆவது போட்டியில் இலங்கை அணி வென்றது. இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை தொடரின் 3ஆவது லீக் போட்டி நாளை பிற்பகல் 3 மணிக்கு பல்லேகலே மைதானத்தில் நடக்கிறது.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், 17 பேர் இடம் பெற்றிருந்தனர். சஞ்சு சாம்சன் பேக்கப் வீரராக அணியில் இடம் பெற்றிருந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மற்றும் நேபாள் அணிக்கு எதிரான போட்டிகளில் கேஎல் ராகுல் இடம் பெறமாட்டார் என்று ஏற்கனவே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருந்தார். இந்த நிலையில், இந்திய அணியின் அடுத்த விக்கெட் வாய்ப்பு யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கேஎல் ராகுல் இடம் பெறாத நிலையில், இஷான் கிஷான் விக்கெட் கீப்பராக இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சஞ்சு சாம்சனால் விளையாட முடியாது. அதற்கு முக்கிய காரணம், 17 பேர் கொண்ட இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. அவர் பேக்கப் வீரராக இடம் பெற்றிருக்கிறார்.
விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரான குஷேஷ்!
சஞ்சு சாம்சனை முக்கிய வீரராக அணியில் சேர்க்க வேண்டும் என்றால், 17 பேர் கொண்ட அணியில் இடம் பெற்ற யாரையாவது ஒருவரை அணியிலிருந்து நீக்க வேண்டும். அப்படி யாரையாவது நீக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்க வேண்டும். அந்த காயத்திற்குரிய சான்றிதழும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், தவிர்க்க முடியாத காரணம் என்று கூறி அணியிலிருந்து விலகிக் கொள்ளலாம்.
டைமண்ட் லீக் தடகள போட்டி : ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா 2ஆவது இடம்!
கேஎல் ராகுல் அணியிலிருந்து விலகினால் மட்டுமே சஞ்சு சாம்சனால் அண்யில் இடம் பெற்று விளையாட முடியும். ஆனால், கேஎல் ராகுல் முக்கியமான விக்கெட் கீப்பராக இருப்பதால், அவரை அணியிலிருந்து நீக்குவதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் போன்று சூப்பர் 4 சுற்றி போட்டிகளிலும் கேஎல் ராகுல் இடம் பெறவில்லை என்றால், சஞ்சு சாம்சன் இடம் பெற வாய்ப்பிருக்கிறது.