Asia Cup 2023, IND vs PAK:கேஎல் ராகுல் இல்லையென்றால், அவருக்குப் பதில் யார்? இந்திய அணியில் நீடிக்கும் இழுபறி!

பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கேஎல் ராகுல் இடம் பெறாத நிலையில், அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

If not KL Rahul, who is best choice for his place against Pakistan in 3rd Match of Asia Cup 2023 rsk

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2ஆவது போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது லீக் போட்டி நாளை 2ஆம் தேதி பல்லேகலே மைதானத்தில் நடக்க இருக்கிறது.

விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரான குஷேஷ்!

இதற்காக இரு அணி வீரர்களும் இலங்கையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தான், பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான அடுத்த 2 போட்டிகளில் கேஎல் ராகுல் விளையாடமாட்டார் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார்.

அவருக்குப் பதிலாக இந்திய அணியில் இஷான் கிஷான் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி, இஷான் கிஷான் அணியில் இடம் பெற்றால், அவர் எந்த இடத்தில் களமிறங்குவார் என்ற கேள்வி எழுகிறது. இஷான் கிஷான் தொடக்க வீரராக களமிறங்கினால், சுப்மன் கில் 3ஆவது இடத்தில் களமிறங்குவார். 4ஆவது இடம் விராட் கோலிக்கும், 5ஆவது இடம் ஷ்ரேயாஸ் ஐயருக்கும் வழங்கப்படும்.

டைமண்ட் லீக் தடகள போட்டி : ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா 2ஆவது இடம்!

இதுவே, இஷான் கிஷான் 3ஆவது இடத்தில் களமிறங்கினால், கோலி 4 ஆவது இடத்திலும், ஷ்ரேயாஸ் ஐயர் 5ஆவது இடத்திலும் களமிறங்குவார். இஷான் கிஷான், 3ஆவது இடத்தில் களமிறங்கி 2 முறை அரைசதம் அடித்திருக்கிறார். இஷான் கிஷான் 4ஆவது இடத்தில் களமிறங்கினால், விராட் கோலி 3ஆவது இடத்திலும், ஷ்ரேயாஸ் ஐயர் 5ஆவது இடத்திலும் களமிறங்குவார்.

மாறாக, இஷான் கிஷானுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற்றால், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். 3ஆவது இடத்தில் விராட் கோலி, 4ஆவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர், 5ஆவது இடத்தில் சஞ்சு சாம்சன் விளையாட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

ஆனால், சஞ்சு சாம்சன் இடம் பெற வாய்ப்புகள் கிடையாது. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சஞ்சு சாம்சன் பேக்கப் வீரராக அணியில் இடம் பெற்றிருக்கிறார். அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்றால், யாராவது ஒருவரை அணியிலிருந்து நீக்க வேண்டும். அல்லது யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருக்க வேண்டும். அதோடு, அதற்கான சான்றிதழும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஷாஹீன் அஃப்ரிடி இருந்தால் என்ன, இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் – சவுரவ் கங்குலி!

தற்போது கேஎல் ராகுலை அணியிலிருந்து நீக்கினால் மட்டுமே சஞ்சு சாம்சனை அணியில் விளையாட வைக்க முடியும். ஆனால், கேஎல் ராகுல் தான் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் என்பதால், அவரை அணி நிர்வாகம் நீக்காது. இரண்டு போட்டிகள் வரையில் இஷான் கிஷான் தான் அணியில் இடம் பெற வாய்ப்புகள் இருக்கிறது. இரண்டு போட்டிகளுக்குப் பிறகும் கூட கேஎல் ராகுல் இடம் பெறவில்லை என்றால், சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

World Cup 2023 Tcikets: இந்தியா மோதும் உலகக் கோப்பை 2023 போட்டி டிக்கெட் விற்பனை தொடக்கம்!

இதன் காரணமாக, இஷான் கிஷான் அணியில் இடம் பெற்றால், அவர் 3 ஆவது வீரராக களமிறங்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. சுப்மன் கில் 3ஆவது இடத்தில் களமிறங்கி சரியான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. ஆதலால், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். இஷான் கிஷான் 3ஆவது இடத்திலும், விராட் கோலி 4ஆவது இடத்திலும், ஷ்ரேயாஸ் ஐயர் 5ஆவது இடத்திலும் களமிறங்குவார்கள்.

இவர்களைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios