நாளை நடக்க உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி மற்றும் ஹரீஷ் ராஃப் இருவரும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி அன்பு பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 30 ஆம் தேதி ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இந்த ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 2ஆவது லீக் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அதிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டி நாளை பிற்பகல் 3 மணிக்கு இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் இலங்கை சென்று அங்கு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

India vs Pakistan: பாகிஸ்தானை தோற்கடிக்க இதை செய்தால் போதும்: முன்னாள் பாக், வீரர் வஹாப் ரியாஸ்!

பயிற்சியின் போது விராட் கோலியும், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹரீஷ் ராஃப் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து கட்டியணைத்து அன்பு பாராட்டியுள்ளனர். ஷதாப் கான், ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் உள்பட பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை விராட் கோலி சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே போன்று ரோகித் சர்மா மற்றும் பாபர் அசாம், முகமது சிராஜ் மற்றும் ஹரீஷ் ராஃப் ஆகியோரும் சந்தித்து பேசியுள்ளனர். இது தவிர்த்து, செய்தியாளர் சந்திப்பின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம், எனக்கு விராட் கோலி நிறைய உதவியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது நான் அவருடன் பேசினேன். அவர் உதவியாக இருந்தார். எங்களுக்கிடையில் பரஸ்பர மரியாதை நிறைய இருக்கிறது என்று கூறியுள்ளார்.

India vs Pakistan: சஞ்சு சாம்சனால் விளையாட முடியாது: கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது?

Scroll to load tweet…