Rinku Singh: ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து சூப்பர் ஓவர் ஹீரோவான ரிங்கு சிங்!
யுபி டி20 லீக் போட்டியில் சூப்பர் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி ரிங்கு சிங் மீரட் மாவெரிக்ஸ் அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடர் போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் டி20 போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 30 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் யுபி டி20 லீக் தொடர் தொடங்கியது. இந்த தொடரானது வரும் 16ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த யுபி டி20 லீக் தொடரில் கான்பூர் சூப்பர்ஸ்டார்ஸ், மீரட் மாவெரிக்ஸ், காசி ருத்ராஸ், கோரக்பூர் லயன்ஸ், லக்னோ பால்கன்ஸ், நொய்டா சூப்பர் கிங்ஸ் என்று 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.
இதில், நேற்று நடந்த போட்டியில் மீரட் மற்றும் காசி ருத்ராஸ் அணிகள் மோதின. இதில், ரிங்கு சிங் மீரட் மாவெரிக்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார். இந்தப் போட்டியில் முதலில் ஆடிய காசி ருத்ராஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. இதில் கரண் சர்மா 58 ரன்னும், ஷிவம் பன்சால் 57 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் கடின இலக்கை துரத்திய மீரட் மாவெரிக்ஸ் அணியில் மாதவ் கௌசிக் அதிரடியாக விளையாடி 87 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக மீரட் மாவெரிக்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுக்கவே போட்டியானது டை ஆனது.
India vs Pakistan: பாகிஸ்தானை தோற்கடிக்க இதை செய்தால் போதும்: முன்னாள் பாக், வீரர் வஹாப் ரியாஸ்!
இதையடுத்து சூப்பர் ஓவர் நடந்தது. இதில், முதலில் ஆசிய காசி ருத்ராஸ் அணியானது, ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்தது. பின்னர் கடினமான ஸ்கோரை துரத்திய மீரட் மாவெரிக்ஸ் அணியில் ரிங்கு சிங் மற்றும் திவ்யன்ஷ் ஜோஷி இருவரும் களமிறங்கினர்.
ஆனால், ரிங்கு சிங் தான் பேட்டிங் ஆடினார். அவர், தொடர்ந்து 3 சிக்ஸர்கள் அடித்து மீரட் மாவெரிக்ஸ் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். இதன் மூலமாக சூப்பர் ஓவரில் ஹீரோவாக திகழ்ந்துள்ளார். இதுவரையில் ஐபிஎல் ஹீரோவாக இருந்த ரிங்கு தற்போது மீரட் மாவெரிக்ஸ் அணிக்காக சூப்பர் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் விளாசி சூப்பர் ஓவர் ஹீரோவாக திகழ்ந்துள்ளார்.