India vs Pakistan: கிளியராக இருக்கும் வானம்: டாஸ் திட்டமிட்டபடி போடப்படுமா?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் டாஸ் திட்டமிட்டபடி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 தொடரின் 3ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் நேபாள் அணியை வீழ்த்தி பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சம பலமான அணி என்பதை நிரூபித்துவிட்டது. ஆனால், இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்தியா விளையாடும் பெங்களூரு மற்றும் கொல்கத்தா போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்!
இந்திய அணியில் காயத்திலிருந்து மீண்டு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றனர். கேஎல் ராகுல் இன்றைய போட்ட்டியில் விளையாடவில்லை. இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடக்கும் இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. அதற்கேற்ப இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மழை குறுக்கீடு இருந்தது. எனினும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த நிலையில், தான் இன்றைய போட்டியில் வானம மேகமூட்டத்துடன் காணப்படும். போட்டியின் நடுவே மழை பெய்யக் கூடும் என்று கூறப்படுகிறது. இன்றைய நிலவரப்படி 60 சதவிகித மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், 98 சதவிகிதம் வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Rinku Singh: ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து சூப்பர் ஓவர் ஹீரோவான ரிங்கு சிங்!
பிற்பகல் நிலவரப்படி வானம் தெளிவாக காணப்படுகிறது. எனினும், சூரியன் அஸ்தமனத்திற்குப் பிறகு இரவு 7 மணி முதல் மழைக்கான வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அது மிதமானது முதல் மிக கன மழை வரையில் பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டாஸ் போடுவதில் எந்த சிக்கலும் ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.