ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 பிளேயர்ஸ் பட்டியலில் யாரெல்லாம் இருக்கிறாங்க?
ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 18246 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று. முதல் முதலாக இங்கிலாந்தில் தான் கிரிக்கெட் விளையாடப்பட்டது. அதுவும் 16ஆவது நூற்றாண்டு காலத்தில் விளையாடப்பட்டது. இந்தியாவில் 1721ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டது. கடந்த 1974 ஆம் ஆண்டு தான் முதல் முதலாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டது.
தற்போது 250க்கும் அதிகமான கிரிக்கெட் வீரர்கள் இதுவரையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் சையத் அபித் அலியிடம் தொடங்கி தற்போது உம்ரான் மாலிக், குல்தீப் சென் வரை பல மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். இதில், நமக்கு தெரிந்தவர்களான சுனில் கவாஸ்கர் தொடங்கி, சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமண் சிவராமகிருஷ்ணன், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கபில் தேவ் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
டிராபி யாருக்கு? டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் -நெல்லை ராயல் கிங்ஸ் பலப்பரீட்சை!
கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் டீம் இந்தியா கிட்டத்தட்ட 1029 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 539 போட்டிகளில் வெற்றியும், 438 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. 9 போட்டிகள் டையில் முடிந்த நிலையில், 43 போட்டிகளுக்கு முடிவு இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 18426 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
வாழ்க்கை ஒரு வட்டம்: 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஆரம்பித்த இடத்திற்கே வந்த விராட் கோலி ஹேப்பி!
சச்சின் டெண்டுல்கர் (1989 - 2012):
இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று 463 போட்டிகளில் 452 இன்னிங்ஸில் விளையாடியுள்ளார். இதில், 41 முறை நாட் அவுட். அதிகபட்சமாக 200 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இதில், 2016 முறை பவுண்டரியும், 195 முறை சிக்ஸர்களும் விளாசியுள்ளார். 49 முறை சதமும், 96 முறை அரைசதமும் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.
WI vs IND: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விராட் கோலி படைக்க இருக்கும் சாதனைகளின் பட்டியல்!
விராட் கோலி (2008 – 2023*):
கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்தவர் விராட் கோலி. இன்று முதல் 274 ஒரு நாள் போட்டிகளில் 265 இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இதில் 12,898 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளார். இதில், 40 முறை நாட் அவுட். அதிகபட்சமாக 183 ரன்கள் குவித்துள்ளார். 1211 முறை பவுண்டரியும், 138 முறை சிக்ஸர்களும் அடித்துள்ளார்.
ஆசிய கோப்பை 2023 அட்டவணை தயார்: பாகிஸ்தானில் போட்டி இல்லை!
சவுரவ் கங்குலி (1992 - 2007):
இந்திய அணியில் இடம் பிடித்து இந்திய அணியின் கேப்டனாக பல சாதனைகளை நிகழ்த்தியவர் சவுரவ் கங்குலி. இவர், 308 போட்டிகளில் 297 இன்னிங்ஸ் விளையாடி 11,221 ரன்கள் குவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 183 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 1104 முறை பவுண்டரிகளும், 189 முறை சிக்ஸர்களும் விளாசியுள்ளார்.
ஆப்பிள் சாப்பிட கூட அலாரம் வைக்கிறார்: புஜாராவைப் பற்றி பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்!
ராகுல் டிராவிட் (1996 - 2011):
இந்திய அணிக்காக 340 போட்டிகளில் 314 இன்னிங்ஸ் விளையாடியவர் ராகுல் டிராவிட். இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். இவர் 10768 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளார். இதில், 942 பவுண்டரிகளும், 42 சிக்ஸர்களும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 153 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
உலகக் கோப்பை 2023: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு!
எம்.எஸ்.தோனி (2004 - 2019):
இந்திய அணியில் இடம் பெற்று கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் நாட்டிற்காக விளையாடியவர் எம்.எஸ்.தோனி. இவரது தலமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை, ஒரு நாள் உலகக் கோப்பை, ஆசிய கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது. தோனி 347 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 294 இன்னிங்ஸில் 10599 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 183 ரன்கள் (நாட் அவுட்) எடுத்துள்ளார். இதில், 809 பவுண்டரிகளும், 222 சிக்ஸர்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.