டிராபி யாருக்கு? டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் -நெல்லை ராயல் கிங்ஸ் பலப்பரீட்சை!
டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடக்க உள்ள நிலையில், நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இதில், லைகா கோவை கிங்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 4 போட்டிகளில் லைகா கோவை கிங்ஸ் அணி தான் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
வாழ்க்கை ஒரு வட்டம்: 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஆரம்பித்த இடத்திற்கே வந்த விராட் கோலி ஹேப்பி!
இதுவரையில் நடந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர்களில் லைகா கோவை கிங்ஸ் அணி ஒரு முறை மட்டுமே டைட்டில் வென்றுள்ளது. அதுவும், கடந்த 2022 ஆம் ஆண்டு லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதோடு, நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஒரு முறை கூட டைட்டில் பெறவில்லை.
WI vs IND: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விராட் கோலி படைக்க இருக்கும் சாதனைகளின் பட்டியல்!
மேலும், நெல்லை ராயல் கிங்ஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு 5ஆவது இடம் பெற்ற நிலையில், கடந்த ஆண்டு 3ஆவது இடம் பெற்றது. ஆனால் லைகா கோவை கிங்ஸ் ஒவ்வொரு ஆண்டும் 4 ஆவது இடம், 4ஆவது இடம், 3ஆவது இடம், 5ஆவது இடம், 4ஆவது இடம் பெற்ற நிலையில், கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இந்த ஆண்டில் நடந்த போட்டிகளில் அதிகபட்சமாக 236 ரன்களை நெல்லை ராயல் கிங்ஸ் அணி எடுத்துள்ளது.
ஆசிய கோப்பை 2023 அட்டவணை தயார்: பாகிஸ்தானில் போட்டி இல்லை!
;
அதிக ரன்கள் குவித்த வீரர்கள்:
இதுவரையில் விளையாடிய 9 போட்டிகளில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வீர அஜிதேஷ் 384 ரன்கள் எடுத்துள்ளார். லைகா கோவை கிங்ஸ் அணி வீரர் சாய் சுதர்சன் 6 போட்டிகளில் விளையாடி 371 ரன்கள் எடுத்துள்ளார். நெல்லை ராயல் கிங்ஸ் வீரர் அருண் கார்த்திக் 9 போட்டிகளில் 236 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று லைகா கோவை கிங்ஸ் வீரர் சுரேஷ் குமார் 8 போட்டிகளில் விளையாடி 223 ரன்கள் குவித்துள்ளார்.
ஆப்பிள் சாப்பிட கூட அலாரம் வைக்கிறார்: புஜாராவைப் பற்றி பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்!
அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்:
லைகா கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான் 8 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அந்த அணியின் மற்ற வீரர்களான கௌதம் தாமரைக் கண்ணன் 8 போட்டிகளில் 11 விக்கெட்டுகளும், எம். சித்தார்த் 8 போட்டிகளில் 10 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
இதே போன்று நெல்லை ராயல் கிங்ஸ் அணி வீரர் எம் பொய்யாமொழி 9 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
ஓபனிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கன்பார்ம்: சுப்மன் கில்லிற்கு 3ஆவது இடம்: பேட்டிங் ஆர்டரில் மாற்றம்!
லைகா கோவை கிங்ஸ்:
எஸ் சுஜய், ஜே சுரேஷ் குமார் (விக்கெட் கீப்பர்), பி சச்சின், யு முகிலேஷ், ஷாருக்கான் (கேப்டன்), ராம் அரவிந்த், ஆதிக் யுஆர் ரஹ்மான், எம் முகமது, மணிமாறன் சித்தார்த், ஜதாவேத் சுப்பிரமணியன், வள்ளியப்பன், யுதீஸ்வரன், கே கௌதம் தாமரைக் கண்ணன், கிரண் ஆகாஷ், ஆர் திவாகர், பி ஹேம்சரண், கேஎம் ஓம் பிரகாஷ், பி வித்யுத்
நெல்லை ராயல் கிங்ஸ்:
அருண் கார்த்திக் (கேப்டன்), பி சுகேந்திரன், அஜிதேஷ் குருசுவாமி, நிதிஷ் ராஜகோபால், ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்), லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், சோனு யாதவ், என்எஸ் ஹரிஷ், எம் பொய்யாமொழி, எஸ் மோகன் பிரசாத், சந்தீப் வாரியர், லக்ஷய் ஜெயின் எஸ், ஆதித்யா அருண், ஆர் மிதுன், வீரமணி, ஸ்ரீ நெரஞ்சன், லட்சுமி நாராயணன் விக்னேஷ், கார்த்திக் மணிகண்டன், எஸ்.ஜே.அருண் குமார், இம்மானுவேல் செரியன், என்.கபிலன், அஸ்வின் கிறிஸ்ட்