ஆப்பிள் சாப்பிட கூட அலாரம் வைக்கிறார்: புஜாராவைப் பற்றி பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்!
சட்டேஷ்வர் புஜாரா, ஆப்பிள் சாப்பிட கூட அலாரம் செட் பண்ணுகிறார் என்று அவரது அசாதாரணமான பழக்க வழக்கம் பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சொதப்பிய சட்டேஷ்வர் புஜாரா, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஆனால், தற்போது துலீப் டிராபியில் சதம் விளாசி வருகிறார்.
ஓபனிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கன்பார்ம்: சுப்மன் கில்லிற்கு 3ஆவது இடம்: பேட்டிங் ஆர்டரில் மாற்றம்!
புதிதாக தொடங்கப்பட்டுள்ள யூடியூப் சேனலில் ரவிச்சந்திரன் அஸ்வின், பீல்டிங் பயிற்சியாளரான திலீப் உடன் கலந்துரையாடினார். அப்போது, பேசிய அஸ்வின் கூறியிருப்பது: ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடுவதற்கு கூட புஜாரா அலாரம் செட் பண்ணி வைக்கிறார். சின்ன சின்ன விஷயத்திற்கு அலாரம் வைத்து சரியான நேரத்தில் அதனை செய்தும் முடிக்கிறார். இரவு சரியாக 7.30 மணிக்கு ஆப்பிள் பழம் சாப்பிட வேண்டும் என்பதற்காக அலாரம் செட் பண்ணி வைக்கிறார்.
தாய்லாந்தில் 2023 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: அதிகாரப்பூர்வ சின்னமாக ஹனுமன் அறிவிப்பு!
இவ்வளவு ஏன், தென் ஆப்பிரிக்காவில் இரவு 7.30 மணிக்கு சட்டேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்கியா ரஹானே இருவரும் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அவர் என்னிடம் வந்து, நான் 20 கேட்சுகள் பிடிக்கட்டுமா என்று கேட்கிறார். அதன் பிறகு 2 மணி நேரம் பேட்டிங் செய்து 20 கேட்சுகள் பிடித்து முடித்து விட்டு அங்கிருந்து சென்றார். அவரைப் போன்று உன்னிப்பாக வேறு யாரையும் நான் பார்த்ததில்லை என்று அஸ்வின் கூறியுள்ளார்.
ட்ரீம் 11 ஜெர்சியுடன் டாப் பேட்ஸ்மேன்கள்: வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்!