Asianet News TamilAsianet News Tamil

WI vs IND 1st ODI: 7ஆவது இடத்தில் இறங்க என்ன காரணம்? ரோகித் சர்மா விளக்கம்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா 7ஆவது வீரராக களமிறங்கியதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

What is the reason for Come at 7th place against West Indies First ODI at Bridgetown? Rohit Sharma explained
Author
First Published Jul 28, 2023, 10:01 AM IST

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், இந்திய அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் ஷாய் ஹோப் மட்டும் பொறுப்புடன் ஆடிய ரன்கள் சேர்த்தார். அவர் 43 ரன்களில் ஆட்டமிழந்தக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.

விசா விவகாரம்... கடைசி நேரத்தில் கழுத்தறுத்த சீனா! இந்திய வுஷூ அணியின் சீனப் பயணம் திடீர் ரத்து!

பந்து வீச்சு தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகையும் கைப்பற்றினர். ஹர்திக் பாண்டியா, முகேஷ் குமார் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் 115 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி ஆடியது. இதில், தொடக்க வீரர்களில் இந்திய அணி சில மாற்றங்களை செய்தது. அதன்படி இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில்லை இந்திய அணி களமிறக்கியது. டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வந்த சுப்மன் கில் இந்தப் போட்டியிலும் மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

திருட்டில் தொடங்கிய காதல் கதை! மொபைலை அபேஸ் செய்த நபருடன் காதலில் விழுந்த பெண்!

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டி ஆடினார். அவர் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். ஒரு புறம் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள பொறுப்புடன் ஆடிய தொடக்க வீரர் இஷான் கிஷான் அரை சதம் அடித்தார். அவர் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 52 ரன்கள் சேர்த்து தூக்கி அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஷர்துல் தாக்கூர் 1 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பெண்ணை மரத்தில் கட்டி, ஆடைகளைக் கிழித்து, அடி உதை... ஜார்க்கண்டில் நடந்த கொடூர சம்பவம்

கடைசியாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரோகித் சர்மா இணைந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியாக இந்திய அணி 22. 5 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி வரும் 29ஆம் தேதி இதே மைதானத்தில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

WI vs IND: பொறுப்புடன் ஆடிய இஷான் கிஷான்: வின்னிங் ஷாட் அடித்து கொடுத்த ரோகித் சர்மா; இந்தியா சிம்பிள் வெற்றி!

வெற்றிக்குப் பிறகு பேசிய ரோகித் சர்மா கூறியிருப்பதாவது: மைதானம் எப்படி இருக்கும் என்று பரிசோதிக்கவே டாஸ் ஜெயிச்சு பந்து வீசினோம். ஆனால், இப்படி இருக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். இலக்கு எளிதில் எட்டக்கூடிய ஸ்கோர் என்பதால், எனது பேட்டிங் ஆர்டரை மாற்றி மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து பரிசோதனை செய்து பார்த்தோம். இது போன்ற வாய்ப்பு எப்போவாவது தான் கிடைக்கும். ஆதலால் தான் நம்பர் 7ல் களமிறங்கினேன் என்று கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரோகித் சர்மா 7ஆவது இடத்தில் களமிறங்கி விளையடியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டுகளில் 7ஆவது இடத்தில் களமிறங்கி விளையாடியிருக்கிறார். அவர் 7ஆவது இடத்தில் விளையாடிய போட்டியில் அரைசதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios