WI vs IND: டி20 போட்டியில் அறிமுகமான முகேஷ் குமார்; 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய இந்தியா; வெ.இ. பேட்டிங்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து நடந்த 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி தற்போது டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடக்கிறது.
முழு உடல் தகுதி பெறாத கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர்: ஆசிய கோப்பை 2023 தொடரில் வாய்ப்பு வழங்கப்படுமா?
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் உம்ரான் மாலிக் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக இந்திய அணி 3 ஸ்பின்னர்களுடன் இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்த டி20 போட்டியின் மூலமாக வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார்.
WI vs IND 1st T20: இந்தியா பிளேயிங் 11ல் யாருக்கு வாய்ப்பு?
இந்திய அணி:
சுப்மன் கில், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.
வெஸ்ட் இண்டீஸ்:
கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், ஜான்சன் சார்லஸ் (விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரன், ஷிம்ரன் ஹெட்மயர், ரோவ்மன் பவால் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்டு, அகீல் ஹூசைன், அல்சாரி ஜோசப், ஓபெட் மெக்காய்
மூன்று டி20 போட்டிகள் வெஸ்ட் இண்டீஸிலும், 2 டி20 போட்டிகள் அமெரிக்காவிலும் நடத்தப்படுகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதில், இஷான் கிஷான், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அக்ஷர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
BCCI Media Rights: பிசிசிஐ மீடியா உரிமைக்கான ஏலத்தில் கூகுள், அமேசான் நிறுவனம்?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 17 வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இருதரப்பு தொடரில் இந்தியா 6 முறையும், வெஸ்ட் இண்டீஸ் 2 முறையும் டி20 தொடரை கைப்பற்றியுள்ளன. கடைசியாக விளையாடிய 5 டி20 போட்டிகளில் இந்திய அணி 5 போட்டியிலும் வெற்றி கண்டுள்ளது.