WI vs IND 1st T20: இந்தியா பிளேயிங் 11ல் யாருக்கு வாய்ப்பு?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போன்றி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Team India Probable Playing 11 Squad against West Indies 1st T20 at Brian Lara Stadium Trinidad

வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து நடந்த 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு 3ஆவது ஒரு நாள் போட்டி நடந்த அதே மைதானமான டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடக்கிறது.

நடுவராக களமிறங்கும் வருமான வரித்துறை அதிகாரி: கோலியின் U19 WC வெற்றிக்கு காரணமாக இருந்த அஜிதேஷ் அர்கல்!

மூன்று டி20 போட்டிகள் வெஸ்ட் இண்டீஸிலும், 2 டி20 போட்டிகள் அமெரிக்காவிலும் நடத்தப்படுகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதில், இஷான் கிஷான், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அக்‌ஷர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

BCCI Media Rights: பிசிசிஐ மீடியா உரிமைக்கான ஏலத்தில் கூகுள், அமேசான் நிறுவனம்?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 17 வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இருதரப்பு தொடரில் இந்தியா 6 முறையும், வெஸ்ட் இண்டீஸ் 2 முறையும் டி20 தொடரை கைப்பற்றியுள்ளன. கடைசியாக விளையாடிய 5 டி20 போட்டிகளில் இந்திய அணி 5 போட்டியிலும் வெற்றி கண்டுள்ளது.

ஓரங்கட்டப்படும் தமிழக வீரர் நடராஜன்: ஆசிய கோப்பை, ஆசிய விளையாட்டு, உலகக் கோப்பை எதிலும் வாய்ப்பில்லை!

ஒருநாள் போட்டிகளைப் போன்று இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோரும், ஹர்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல் ஆகியோர் சிறந்த ஆல் ரவுண்டர்களாகவும், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம் பெற வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நாளை தொடக்கம்..! கோப்பையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கிய சர்வதேச ஹாக்கி நிர்வாகிகள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios