நடுவராக களமிறங்கும் வருமான வரித்துறை அதிகாரி: கோலியின் U19 WC வெற்றிக்கு காரணமாக இருந்த அஜிதேஷ் அர்கல்!
விராட் கோலியின் அண்டர் 19 உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த அஜிதேஷ் அர்கல் நடுவராக களமிறங்க உள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பிறந்து, வதோதராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஜிதேஷ் அர்கல். இவர், மலேசியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவரும் இவரே.
BCCI Media Rights: பிசிசிஐ மீடியா உரிமைக்கான ஏலத்தில் கூகுள், அமேசான் நிறுவனம்?
ஆர்கல் 5 ஓவர்களில் வெறும் 7 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலமாக இந்தியா, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உலகக் கோப்பையில் சாம்பியனானது. இந்த தொடரில் பல ஐபிஎல் நட்சத்திரங்களுடன் ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெற்றிருந்தார்.
வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளரான அர்கல் பின்னர் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2008 சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் சேர்ந்தார். அதன் பிறகு ஆர்கல் வருமான வரித்துறை ஆய்வாளராக ஆனார். அவர் இப்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) நடுவராக கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார்.
ஒரு பந்து வீச்சாளராகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் திகழும் ஆர்கல் பரோடாவுடன் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 10 முதல் தர போட்டிகள், 6 டி20 போட்டிகள் மற்றும் 3 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி மொத்தமாக 29 விக்கெட்டுகளை எடுத்தார். கடைசியாக 2015ல் ரஞ்சி கோப்பையில் மத்திய பிரதேசத்துக்கு எதிராக பரோடா அணிக்காக விளையாடினார்.
ஸ்போர்ட் கோட்டா மூலமாக, வருமான வரித்துறை அதிகாரியாக வேலைக்கு சேர்ந்தார். தற்போது அண்டர் 19 உலகக் கோப்பையின் மற்றொரு வீரராக இடம் பெற்றிருந்த தன்மய் ஸ்ரீவஸ்தவாவுடன் நடுவர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர்கள் இந்த மாதம் பிசிசிஐ மூலமாக நடத்தப்படும் ஓரியண்டேஷன் புரோகிராம மற்றும் செமினாரில் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.