WI vs IND: வாய்ப்புக்காக காத்திருக்கும் ஷர்துல் தாக்கூர் – WIக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தல்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் ஒரு ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய இந்திய டெஸ்ட் தொடரை கைப்பற்றியதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் ஷர்துல் தாக்கூர் 3 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 14 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
இதே போன்று 2ஆவது ஒரு நாள் போட்டியில், 8 ஓவர்கள் வீசி 43 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த நிலையில், தான் தொடரை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. இதில், முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் எடுத்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அலிக் அதனாஸ் 32 ரன்களும், குடகேஷ் மோத்தி 39 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பந்து வீச்சைப் பொறுத்த வரையில் ஷர்துல் தாக்கூர் 6.3 ஓவர்களில் வீசி 37 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் 7 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 3 விக்கெட் கைப்பற்றி 30 ரன்கள் கொடுத்தார். குல்தீப் யாதவ் 2 ஓவர்கள் மெய்டன் வீசி 13ஆவது பந்தில் ஒரு விக்கெட் கைப்பற்றியதோடு 8 ஓவர்கள் வீசி 3 மெய்டன் உள்பட 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
IND vs WI: 2021 ஆம் ஆண்டு முதல் விராட் கோலி இடம் பெறாத ஒரு நாள் போட்டிகள் எத்தனை தெரியுமா?
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை முதல் ஒரு நாள் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில் அதிகப்படியாக விக்கெட்டுகள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக எடுத்துள்ளார். 3ஆவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு பேசிய ஷர்துல் தாக்கூர் கூறியிருப்பதாவது: அணியில் இடம் பிடிக்கும் வகையில் விளையாடும் வீரர் நான் இல்லை. உலகக் கோப்பைக்கு அணி நிர்வாகம் தேர்வு செய்யாவிட்டாலும், அது அவர்களின் அழைப்பாக இருக்கும். நான் என் இடத்துக்காக விளையாட வேண்டும் என்று நினைப்பது தவறாகிவிடும்" என்று கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுகிறது. இதையடுத்து மிக முக்கியமான தொடர்களான ஆசிய கோப்பை 2023 மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இதில், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறந்த ஆல் ரவுண்டர்களாக இருக்கும் நிலையில், ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அயர்லாந்து டி20 தொடரில் ஷர்துல் தாக்கூர் இடம் பெறவில்லை. எனினும், அணி நிர்வாகம் ஷர்துல் தாக்கூரின் திறமையை கருத்தில் கொண்டு ஆசிய கோப்பை தொடரில் இடம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.