World Cup 2023 Re-Schedule: இந்தியா பாகிஸ்தான் போட்டி உள்பட உலகக் கோப்பை 2023 தொடருக்கான 3 போட்டியில் மாற்றம்?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி உள்பட உலகக் கோப்பை 2023 தொடரின் 3 போட்டியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த உலகக் கோப்பை 2023 தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, நெதர்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து என்று 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா முழுவதும் 10 மைதானங்களில் இந்தப் போட்டி நடக்கிறது.
IND vs WI: 2021 ஆம் ஆண்டு முதல் விராட் கோலி இடம் பெறாத ஒரு நாள் போட்டிகள் எத்தனை தெரியுமா?
முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், அக்டோபர் 15 ஆம் நவராத்திரி விழா கொண்டாடப்படுவதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று கருதி உலகக் கோப்பை அட்டவணையை மாற்றக் கோரி கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி உள்பட 3 போட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 6 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் போட்டி அக்டோபர் 5 அல்லது வேறொரு தேதிக்கு மாற்றப்படும் என்று தெரிகிறது. இதே போன்று அக்டோபர் 15 ஆம் தேதி நடக்க இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 14 ஆம் தேதி மாற்றப்படுவதாக தெரிகிறது.
அக்டோபர் 10 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோத இருந்த போட்டிக்குப் பதிலாக அந்த நாளில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
WI vs IND 3rd ODI: இஷான் கிஷான், கில், ஹர்திக் பாண்டியா அதிரடி; இந்தியா 351 ரன்கள் குவிப்பு!