AUS vs WI: 183 ரன்னுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா – கடைசியாக ஆறுதல் வெற்றியோடு நாடு திரும்பும் வெஸ்ட் இண்டீஸ்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெர்த் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக ஆண்ட்ரே ரஸல் 29 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உள்பட 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஷெர்பேன் ரூதர்போர்டு 40 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 67 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் 221 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆரோன் ஹார்டி 16 ரன்களில் வெளியேறினார். டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜோஷ் இங்கிலிஸ் 1, கிளென் மேக்ஸ்வெல் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியாக வந்த டிம் டேவிட் 41 ரன்னும், மேத்யூ வேட் 7 ரன்கள் எடுக்கவே ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
AUS vs WI 3rd T20I: ருத்ரதாண்டவம் ஆடிய ரூதர்போர்டு, ரஸல் – வெஸ்ட் இண்டீஸ் 220 ரன்கள் குவிப்பு!
இதன் மூலமாக, வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றியோடு நாடு திரும்புகிறது. ஏற்கனவே நடந்த முதல் 2 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா 2-0 என்று வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. தற்போது 3 ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறவே 2-1 என்று ஆஸ்திரேலியா தொடரை வென்றது.