WI vs IND 2nd Test: 26 ரன்னுக்கு 5 விக்கெட்; வெஸ்ட் இண்டீஸ் 255க்கு ஆல் அவுட்; முகமது சிராஜ் 5 விக்கெட்!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 255 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிரினிடாட்டின் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயீன்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்கள் எடுத்தது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57, ரோகித் சர்மா 80, விராட் கோலி 121, ரவீந்திர ஜடேஜா 61 மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் 56 ரன்கள் எடுத்தனர்.
பட்டைய கிளப்பிய பாகிஸ்தான் ஏ – 352 ரன்கள் குவிப்பு; பழிக்கு பழி கன்ஃபார்ம்!
பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில் கேப்டன் பிராத்வைட் 75 ரன்னும், சந்தர்பால் டெகனரைன் 33 ரன்னும், கிர்க் மெக்கென்ஸி 32 ரன்னும், ஜெர்மைன் பிளாக்வுட் 20 ரன்னும் எடுத்தனர். 3ஆம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது. இதில், ஜேசன் ஹோல்டர் 11 ரன்னுடனும், அலிக் அதனாஸ் 37 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
புறக்கணிக்கப்பட்ட பாபர் அசாம், இது வளர வேண்டிய நேரம்: ஐசிசியை சாடிய சோயப் அக்தர்!
இதையடுத்து 4ஆம் நாள் போட்டி கொஞ்சம் முன்னதாகவே தொடங்கப்பட்டது. ஹோல்டர் மற்றும் அதனாஸ் இருவரும் இன்றைய போட்டியை தொடங்கினர். இதில் அதனாஸ் ரன் ஏதும் எடுக்காமல் முகேஷ் குமார் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். இதே போன்று ஹோல்டர் கூடுதலாக 4 ரன்கள் சேர்த்த நிலையில், சிராஜ் பந்தில் இஷான் கிஷானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இது அவரோட பிரச்சனை: நல்ல நடத்தையை வெளிப்படுத்தியிருக்கலாம்: வங்கதேச மகளிர் கேப்டன் நிகர் சுல்தானா!
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே வெஸ்ட் இண்டீஸ் கூடுதலாக 26 ரன்கள் சேர்ப்பதற்குள்ளாக எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், இந்திய அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக முகேஷ் குமார் 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும், ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதன் மூலமாக 183 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா தனது 2ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
5 விக்கெட் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி; நாள் முழுவதும் ஆஸி, ஆடினால் மேட்ச் டிரா!