பட்டைய கிளப்பிய பாகிஸ்தான் ஏ – 352 ரன்கள் குவிப்பு; பழிக்கு பழி கன்ஃபார்ம்!
இந்தியா ஏ அணிக்கு எதிரான ஏசிசி வளர்ந்து வரும் ஆண்களுக்கான ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் ஏ அணி 352 ரன்கள் குவித்துள்ளது.
ஏசிசி வளர்ந்து வரும் ஆண்களுக்கான ஆசிய கோப்பை 2023 தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இதில், இந்தியா ஏ, வங்கதேசம் ஏ, ஆப்கானிஸ்தான் ஏ, பாகிஸ்தான் ஏ, ஓமன் ஏ, இலங்கை ஏ, நேபாள், ஐக்கிய அரபு நாடுகள் ஏ ஆகிய 8 அணிகள் இடம் பெற்று விளையாடின. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஓமன் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய அணிகள் இடம் பெற்று விளையாடின.
புறக்கணிக்கப்பட்ட பாபர் அசாம், இது வளர வேண்டிய நேரம்: ஐசிசியை சாடிய சோயப் அக்தர்!
இதில், முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. அதன்படி, இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் அடுத்தடுத்து நடந்த அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இன்று இரு அணிகளுக்கும் இடையிலான ஆசிய கோப்பை இறுதிப் போட்டி நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்தியா ஏ அணியின் கேப்டனான யாஷ் துல் பவுலிங் தேர்வு செய்தார்.
இது அவரோட பிரச்சனை: நல்ல நடத்தையை வெளிப்படுத்தியிருக்கலாம்: வங்கதேச மகளிர் கேப்டன் நிகர் சுல்தானா!
அதன்படி பாகிஸ்தான் ஏ அணி முதலில் பேட்டிங் ஆடியது. இந்த அணியின் தொடக்க வீரர்களான சைம் அயூப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது. சைம் அயூப் 59 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து உமைர் யூசுப் களமிறங்கி விளையாடினார்.
மற்றொரு தொடக்க வீரரான சாஹிப்சாதா ஃபர்ஹான் 65 ரன்கள் சேர்த்த நிலையில், ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து தயப் தாஹிர் களமிறங்கினார். இதற்கிடையில் உமர் யூசுப் 35 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, காசீம் அக்ரம் 0 ரன்னிலும், கேப்டனும், விக்கெட் கீப்பருமான முகமது ஹரீஸ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
5 விக்கெட் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி; நாள் முழுவதும் ஆஸி, ஆடினால் மேட்ச் டிரா!
அடுத்ததாக முபாசீர் கான் களமிறங்கினார். இதற்கிடையில், தயப் தாஹிர் அதிரடியாக விளையாடி இந்தியா ஏ அணியின் பவுலர்களை திணற வைத்தார். ஒரு கட்டத்தில் 71 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்கவே, பாகிஸ்தான் ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்து, இந்தியா ஏ அணிக்கு கடின இலக்கை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பதிலடி கொடுக்குமா பாகிஸ்தான் ஏ? டைட்டில் ஜெயிக்குமா இந்தியா ஏ? ஆசிய கோப்பை ஃபைனல் இன்று!
இதற்கு முன்னதாக இரு அணிகளும் குரூப் பி போட்டியில் மோதின. இதில், பாகிஸ்தான் ஏ அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் ஆடிய இந்தியா ஏ அணி 36.4 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 210 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி டாஸ் வென்று பேட்டிங் ஆடியது என்பது குறிப்பிடத்தக்கது.