Asianet News TamilAsianet News Tamil

5 விக்கெட் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி; நாள் முழுவதும் ஆஸி, ஆடினால் மேட்ச் டிரா!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்று முழுவதும் விளையாடினால் போட்டி டிரா ஆகும்.

If England take remaining 5 wickets, then it will win against australia, 4th test match otherwise match will be drawn
Author
First Published Jul 23, 2023, 1:00 PM IST

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில், இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில், 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பதிலடி கொடுக்குமா பாகிஸ்தான் ஏ? டைட்டில் ஜெயிக்குமா இந்தியா ஏ? ஆசிய கோப்பை ஃபைனல் இன்று!

மிட்செல் மார்ஷ் 51 ரன்களும், மார்னஸ் லபுஷேன் 51 ரன்களும், டிராவிஸ் ஹெட் 48 ரன்களும் எடுத்தனர். பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போன்று விளையாடி ரன்கள் சேர்த்தார். அவர், 182 பந்துகளில் 21 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 189 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

நடுவரின் தவறான முடிவு: ஆத்திரத்தில் ஸ்டெம்பை உடைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்; வைரலாகும் வீடியோ!

ஜோ ரூட் 84 ரன்களும், மொயீன் அலி 54 ரன்களும், ஹாரி ப்ரூக் 61 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 51 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 99 ரன்களும் எடுக்கவே இங்கிலாந்து 592 ரன்கள் குவித்தது. பின்னர் 275 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், தொடக்க வீரர்களான உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

டிராவில் முடிந்த கடைசி ஒரு நாள் போட்டி: ஒரு ரன்னில் தொடரை கோட்டை விட்ட இந்திய மகளிர் அணி!

பின்னர் வந்த, மார்னஷ் லபுஷேன் 173 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 111 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ஸ்மித் 17, ஹெட் 1 ரன்னில் ஆட்டமிழக்க, மிட்செல் மார்ஷ் 31 ரன்னுடனும், கேமரூன் க்ரீன் 3 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். நான்கு நாட்கள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்துள்ளது. 5ஆவது நாளான இன்று எஞ்சிய 61 ரன்கள் எடுத்து மீண்டும் ரன்கள் சேர்த்து நாள் முழுவதும் விளையாடினால், போட்டி டிரா ஆகும். ஆனால், இந்த 61 ரன்களை எடுப்பதற்குள்ளாக ஆஸ்திரேலியா எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் இழந்துவிட்டால் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios