பதிலடி கொடுக்குமா பாகிஸ்தான் ஏ? டைட்டில் ஜெயிக்குமா இந்தியா ஏ? ஆசிய கோப்பை ஃபைனல் இன்று!
ஏசிசி வளர்ந்து வரும் ஆண்களுக்கான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ மற்றும் இந்தியா ஏ இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஏசிசி வளர்ந்து வரும் ஆண்களுக்கான ஆசிய கோப்பை 2023 தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இதில், இந்தியா ஏ, வங்கதேசம் ஏ, ஆப்கானிஸ்தான் ஏ, பாகிஸ்தான் ஏ, ஓமன் ஏ, இலங்கை ஏ, நேபாள், ஐக்கிய அரபு நாடுகள் ஏ ஆகிய 8 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஓமன் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய அணிகள் இடம் பெற்று விளையாடின.
நடுவரின் தவறான முடிவு: ஆத்திரத்தில் ஸ்டெம்பை உடைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்; வைரலாகும் வீடியோ!
இதில், முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. அதன்படி, நேற்று முன் தினம் நடந்த 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஏ மற்றும் வங்கதேசம் ஏ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் ஏ அணிகள் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ஏ அணி முதலில் பேட்டிங் ஆடியது.
டிராவில் முடிந்த கடைசி ஒரு நாள் போட்டி: ஒரு ரன்னில் தொடரை கோட்டை விட்ட இந்திய மகளிர் அணி!
இந்தியா ஏ அணியில் சாய் சுதர்சன் 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் யாஷ் துல் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 34 ரன்களிலும் ஆட்டமிழக்க இந்தியா ஏ அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து வங்கதேச ஏ அணி விளையாடியது. இதில், தன்ஷித் ஹாசன் 51 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரர் முகமது நைம் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வங்கதேச ஏ அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து 51 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலமாக இந்தியா ஏ அணி இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி கொழும்புவில் உள்ள அர் பிரேமதாச மைதானத்தில் நடக்கிறது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய, குரூப் பி போட்டியில் இந்தியா ஏ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா ஏ அணி வீரர் சாய் சுதர்சன் 110 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்ஸர்கள் உள்பட 104 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டம் காட்டி ஏமாத்திய சுப்மன் கில், ரஹானே: ரசிகர்கள் விமர்சனம்!
இதற்கு முன்னதாக நடந்த வளர்ந்து வரும் ஆண்களுக்கான ஆசிய கோப்பை 2013 கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியனானது. இதில், பும்ரா, சூர்யா, சந்தீப் சர்மா, ஹர்ஷல், பாபா அபராஜித், சந்தீப் வாரியர் ஆகியோர் பலர் இடம் பெற்றிருந்தனர்.