இது அவரோட பிரச்சனை: நல்ல நடத்தையை வெளிப்படுத்தியிருக்கலாம்: வங்கதேச மகளிர் கேப்டன் நிகர் சுல்தானா!
ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டமிழந்தது தொடர்பாக கருத்து சொல்ல விரும்பாத வங்கதேச மகளிர் அணி கேப்டன் நிகர் சுல்தானா, அவர் நல்ல நடத்தையை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஐசிசி சாம்பியன்ஷிப் தொடரிலும் பங்கேற்றது. ஏற்கனவே நடந்து முடிந்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய மகளிர் அணி 2-1 என்ற் கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில், முதல் ஒரு நாள் போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி வங்கதேச மகளிர் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
10 ஆண்டு டேட்டிங்கிற்கு பிறகு நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த எய்டன் மார்க்ரம்!
2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதியாக இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் நடந்தது.இதில், வங்கதேச மகளிர் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி முதலில் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது.
5 விக்கெட் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி; நாள் முழுவதும் ஆஸி, ஆடினால் மேட்ச் டிரா!
இதில், தொடக்க வீராங்கனையான ஃபர்கானா ஹோக் 107 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஷமிமா சுல்தானா 52 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், எளிய இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஸ்டிகா பதியா 5 ரன்களில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பதிலடி கொடுக்குமா பாகிஸ்தான் ஏ? டைட்டில் ஜெயிக்குமா இந்தியா ஏ? ஆசிய கோப்பை ஃபைனல் இன்று!
அடுத்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் களமிறங்கினார். அவர், நிதானமாக விளையாடிக் கொண்டிருந்தார். 14 ரன்கள் எடுத்திருந்த போது நஹீதா அக்தர் வீசிய பந்தை ஸ்வீப் அடிக்க முயற்சித்தார். ஆனால், பந்து அவரது பேடில் பட்டு அதன் பிறகு அவரது கையில் பட்டு சென்றுள்ளது. லெக் ஸ்லிப்பில் நின்றிருந்த பீல்டர் பந்தை கேட்ச் பிடித்துள்ளார். ஆனால் அதற்குள்ளாக பவுலர் நடுவரிடம் எல்பிடபிள்யூவிற்கு அப்பீல் செய்யவே நடுவரும் சற்றும் யோசிக்காமல் அவுட் கொடுத்துள்ளார்.
நடுவரின் தவறான முடிவு: ஆத்திரத்தில் ஸ்டெம்பை உடைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்; வைரலாகும் வீடியோ!
இதனால், ஆத்திரமடைந்த ஹர்மன்ப்ரீத் கவுர் ஸ்டெம்பை உடைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒருபுறம் நிலையாக நின்று ஆடிய ஹர்லீன் தியோல் 77 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்தவர்கள் ஓரிரு ரன்களில் வெளியேறவே கடைசி வரை போராடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்திய மகளிர் அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்கள் எடுக்க போட்டி டை ஆனது. கூடுதலாக ஒரு ரன் எடுத்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். எனினும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை இரு அணிகளும் 1-1 என்று சமன் செய்துள்ளன.
போட்டி முடிந்த பிறகு பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியிருப்பதாவது: இது போன்ற நடுவர்களால் நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம். அடுத்த முறை நாங்கள் வங்கதேசத்திற்கு வரும் போது இது போன்ற நடுவர்களை சமாளிப்பதை உறுதி செய்து அதற்கேற்ப எங்களை தயார்படுத்துவோம் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய வங்கதேச மகளிர் அணி கேப்டன் நிகர் சுல்தானா கூறியிருப்பதாவது: இது முற்றிலும் ஹர்மன்ப்ரீத் கவுரின் பிரச்சனை. எனக்கும் இதில் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அவர் சிறந்த நடத்தையை வெளிப்படுத்தியிருக்கலாம்" என்றார்.