10 ஆண்டு டேட்டிங்கிற்கு பிறகு நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த எய்டன் மார்க்ரம்!
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எய்டன் மார்க்ரம் தனது நீண்ட நாள் காதலியான நிக்கோலை நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த 1994 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் எய்டன் மார்க்ரம். அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தென் ஆப்பிரிக்கா அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,285 ரன்கள் எடுத்துள்ளார். 50 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1,440 ரன்கள் எடுத்துள்ளார். அதோடு 33 டி20 போட்டிகளில் விளையாடி 931 ரன்கள் வரையில் எடுத்துள்ளார்.
5 விக்கெட் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி; நாள் முழுவதும் ஆஸி, ஆடினால் மேட்ச் டிரா!
இது தவிர ஐபிஎல் தொடரிலும் விளையாடியுள்ளார். ஆரம்பத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடிய நிலையில், தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேப்டனாக இருந்து வருகிறார். இது தவிர உள்ளூர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்த நிலையில், தான் தனது நீண்ட நாள் காதலியான நிக்கோலை நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பதிலடி கொடுக்குமா பாகிஸ்தான் ஏ? டைட்டில் ஜெயிக்குமா இந்தியா ஏ? ஆசிய கோப்பை ஃபைனல் இன்று!
கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஒரு ஆண்டுக்குப் பிறகு நேற்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நிக்கோலே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் என்று பதிவிட்டுள்ளார். திருமணம் செய்து கொண்ட மார்க்ரமிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடுவரின் தவறான முடிவு: ஆத்திரத்தில் ஸ்டெம்பை உடைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்; வைரலாகும் வீடியோ!