லட்டு கேட்சை கோட்டைவிட்டு, ஒரு கையால் கேட்ச் பிடித்த கோலி; ஒருநாள் கிரிக்கெட்டில் 143 கேட்ச் பிடித்து அசத்தல்!

நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் ஆசிப் சேக் கொடுத்த முதல் கேட்சை கோட்டைவிட்ட விராட் கோலி, பின்னர் அவர் கொடுத்த கடினமான கேட்சை ஒரு கையால் பிடித்துள்ளார்.

Virat Kohli take his 143rd catch after took Nepal player Aasif Sheikh wicket in 5th match of Asia Cup 2023 rsk

இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 5ஆவது லீக் போட்டி தற்போது பல்லேகலே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவிற்குப் பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

லட்டு மாதிரியான கேட்சுகளை கோட்டை விட்ட ஷ்ரேயாஸ், கோலி, இஷான் கிஷான் – உச்சகட்ட கோபத்தில் ரோகித் சர்மா!

முதல் ஓவரை ஷமி வீசினார். நேபாள் அணியில் குஷால் புர்டெல், ஆசிப் ஷேக் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர் இதில், முதல் ஓவரின் கடைசி பந்தில் குஷால் புர்டெல் கொடுத்த லட்டு மாதிரியான கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்றிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் கோட்டைவிட்டார். இதே போன்று 2ஆவது ஓவரின் முதல் பந்தில் ஆசிப் ஷேக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கோட்டைவிட்டார்.

Asia Cup 2023 Super 4: கனமழை காரணமாக சூப்பர் 4 சுற்று போட்டிகள் மாற்றப்பட வாய்ப்பு!

இதே போன்று, 4.2 ஆவது ஓவரில் புர்டெல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் கோட்டைவிட்டார். இது பவுலர்களுக்கு மட்டுமின்றி கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கோபத்தை உண்டாக்கியது. முதல் 5 ஓவர்களுக்குள்ளாக நேபாள் வீரர்கள் கொடுத்த கேட்ச் வாய்ப்பை எல்லாம் இந்திய வீரர்கள் கோட்டைவிட்டனர். அதன் பிறகு தொடக்க வீரர்கள் இருவரும் அதிரடியாக ஆடத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 65 ரன்கள் குவித்தது. ஷர்துல் தாக்கூர் ஓவரில் இஷான் கிஷானிடம் புர்டெல் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சிறிய குடும்பம் வளர்ந்துள்ளது, நிலவுக்கு மேல் இருக்கிறோம் – அங்கத் ஜஸ்ப்ரித் பும்ராவை வரவேற்ற கிரிக்கெட்டர்!

இதையடுத்து மற்றொரு தொடக்க வீரர் 97 பந்துகளில் 8 பவுண்டரி உள்பட 58 ரன்கள் சேர்த்த நிலையில், முகமது சிராஜ் பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆசிப் ஷேக் தனது 10ஆவது அரைசதத்தை இன்று அடித்துள்ளார். ஆசிப் ஷேக் 1 ரன்னாக இருந்த போது சிராஜ் ஓவரில் அவர் கொடுத்த கேட்சை தான் கோலி கோட்டைவிட்டார். அதன் பிறகு 29.5ஆவது ஓவரில் ஆசிப் ஷேக் ஆட்டமிழந்தார். மேலும், ஷேக்கின் கேட்சை பிடித்ததன் மூலமாக விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 143 ஆவது கேட்சை பிடித்துள்ளார்.

இடையிடையில் மழை பெய்து வருகிறது. தற்போது வரையில் நேபாள் அணி 37 ஓவர்கள் வரையில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

 

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios