Asianet News TamilAsianet News Tamil

Asia Cup 2023 Super 4: கனமழை காரணமாக சூப்பர் 4 சுற்று போட்டிகள் மாற்றப்பட வாய்ப்பு!

கொழும்புவில் கனமழை எதிரொளி காரணமாக சூப்பர் 4 சுற்று போட்டிகள் அனைத்தும் பல்லேகலேவிற்கு மாற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Due to heavy rain, Asia Cup Super 4 round matches are likely to be changed rsk
Author
First Published Sep 4, 2023, 2:02 PM IST

ஆசியக் கோப்பை 2023 இறுதி மற்றும் சூப்பர்-4 போட்டிகளுக்கான இடம் மழை அச்சுறுத்தல் காரணமாக கொழும்பில் இருந்து பல்லேகலவிற்கு மாற்றப்படலாம். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தற்போது போட்டியை நடத்தும் இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மைதானத்தை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது.

India vs Nepal: முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா – நேபாள் பலப்பரீட்சை!

இலங்கை கிரிக்கெட் வாரியம் பரிசீலனைக்கு மூன்று சாத்தியமான மைதானங்களை அடையாளம் கண்டுள்ளது: பல்லேகலே, தம்புள்ளா மற்றும் அம்பாந்தோட்டை ஆகியவை ஆகும். பங்கேற்கும் ஆறு அணிகளுக்கும் இடம் மாற்றம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய குடும்பம் வளர்ந்துள்ளது, நிலவுக்கு மேல் இருக்கிறோம் – அங்கத் ஜஸ்ப்ரித் பும்ராவை வரவேற்ற கிரிக்கெட்டர்!

பல்லேகலேயில் தற்போது ஆசிய கோப்பை லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன, ஆனால் இந்தப் பகுதியில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது. சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தம்புள்ளாவில் மழை பொழிவதற்கான சாத்தியக்கூறு மிக மிக குறைவு. தம்புள்ளாவில் உள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானம் குறுகிய அறிவிப்பில் பல போட்டிகளை நடத்துவதற்கு தயார்நிலையில் இருப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்தார்.

India vs Nepal: பும்ராவிற்குப் பதிலாக களமிறங்கும் ஷமி; ஷர்துல் தாக்கூருக்கும் வாய்ப்பு உண்டு!

மறுபுறம் ஹம்பாந்தோட்டையில் தற்போது இலங்கையில் சிறந்த வானிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு ஹம்பாந்தோட்டையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் தயார்நிலையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கவனமாக மதிப்பீடு செய்து வருகிறது.

சூப்பர் 4 சுற்று போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், அதற்குள்ளாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலானது இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios