சிறிய குடும்பம் வளர்ந்துள்ளது, நிலவுக்கு மேல் இருக்கிறோம் – அங்கத் ஜஸ்ப்ரித் பும்ராவை வரவேற்ற கிரிக்கெட்டர்!

ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் தம்பதிக்கு இன்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Jasprit Bumrah and Sanjana Ganesan Couples welcome their first Boy Baby named angad Jasprit Bumrah rsk

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கும், டெலிவிஷன் பிரபலமான சஞ்சனா கணேஷிற்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி திருமணம் நடந்தது. இதையடுத்து தற்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் சஞ்சனா கணேஷ் தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

India vs Nepal: பும்ராவிற்குப் பதிலாக களமிறங்கும் ஷமி; ஷர்துல் தாக்கூருக்கும் வாய்ப்பு உண்டு!

இது குறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எங்கள் சிறிய குடும்பம் வளர்ந்துள்ளது. எங்கள் இதயங்கள் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நிரம்பியுள்ளன! இன்று காலை நாங்கள் எங்கள் சிறுவன் அங்கத் ஜஸ்பிரித் பும்ராவை உலகிற்கு வரவேற்றோம். நாங்கள் நிலவுக்கு மேல் இருக்கிறோம், எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயம் அனைத்திற்கும் காத்திருக்க முடியாது- ஜஸ்பிரித் மற்றும் சஞ்சனா என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இறுதி செய்த பிசிசிஐ: நாளை அறிவிப்பு?

பும்ரா தனது குழந்தைக்கு அங்கத் என்று பெயரிட்டுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியைத் தொடர்ந்து நேபாள் போட்டிக்கு முன்னதாக தனிப்பட்ட காரணத்திற்காக மும்பைக்கு பும்ரா வந்துள்ளார். ஆனால், ஏன் வந்தார் என்பதற்காக காரணம் தான் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது,  தனது முதல் குழந்தையின் பிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜஸ்ப்ரித் பும்ரா மும்பைக்கு சென்றுள்ளார்.

எப்போ வேண்டுமென்றாலும் குழந்தை பிறக்கலாம்; குழந்தை பிறப்பில் கலந்து கொள்ள சிட்டா பறந்து வந்த பும்ரா!

இன்று நடக்க உள்ள நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா கலந்து கொள்ள மாட்டார். அவருக்குப் பதிலாக முகமது ஷமி கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. வரும் சூப்பர் 4 சுற்று மூலமாக மீண்டும் பும்ரா அணியில் இடம் பெற உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Virat Kohli Sand Art: விராட் கோலிக்காக உருவாக்கப்பட்ட மணல் சிற்பம் ஓவியம்; வைரலாகும் வீடியோ!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios