என்னா ஓட்டம், 6 வினாடியில் இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கமா ஓடி பந்தை எடுத்த விராட் கோலி: வீடியோ பாருங்க!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 6 வினாடியில் ஓடிச் சென்று பந்தை எடுத்த விராட் கோலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. டாஸ் வென்ற இந்திய அணியின் ஒரு நாள் கேப்டன் ஹர்திக் பாண்டியா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலியா முதலில் ஆடியது. ஹர்திக் பாண்டியா பந்து வீசினார். அப்போது விராட் கோ ஆஃப் சைடில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். மிட்செல் மார்ஷ் பேட்டிங் ஆடினார். ஹர்திக் வீசிய பந்தை மிட் விக்கெட் பக்கமாக மிட்செல் மார்ஷ் திருப்பி விட்டார். இதையடுத்து, ஆஃப் சைடிலிருந்து மின்னல் வேகத்திஐ பிட்சை தாண்டிச் சென்று பந்தை எடுத்தார். ஆனால், அதற்குள்ளாக அவர்கள் 2 ரன்கள் ஓடி எடுத்துவிட்டனர்.
விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை - ராம் சரண் ஓபன் டாக்!
வெறும் 6 விநாடியில் ஓடிச் சென்று பந்தை எடுத்த விராட் கோலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி அவரை உசேன் போல்ட்டுடன் ஒப்பிட்டும் வருகின்றனர். இந்தப் போட்டியில் விராட் கோலி 4 ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தகது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 186 ரன்கள் எடுத்து 200 ரன்கள் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். எனினும், இந்தப் போட்டியில் அவர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி 19 ஆம் தேதி நாளை விசாகப்பட்டினம் மைதானத்தில் நடக்க இருக்கிறது. முதல் போட்டியில் ஓய்வில் இருந்த ரோகித் சர்மா இந்தப் போட்டியில் விளையாடுகிறார்.
இந்தியா: பிளேயிங் 11
ஓபனிங் - ரோகித் சர்மா - சுப்மன் கில்
3. விராட் கோலி
4. சூர்யகுமார் யாதவ்
5. கேஎல் ராகுல்
6. ஹர்திக் பாண்டியா
7. ரவீந்திர ஜடேஜா
8. ஷர்துல் தாக்கூர் / அக்ஷர் படேல்
9. குல்தீப் யாதவ்
10. முகமது சிராஜ்
11. முகமது ஷமி
காலில் அறுவை சிகிச்சை செய்தும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிரட்டி ரவீந்திர ஜடேஜா படைத்த சாதனைகள்!
ஆஸ்திரேலியா- பிளேயிங் 11
ஓபனிங் - டிராவிஸ் ஹெட் அல்லது டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ்
3. ஸ்டீவ் ஸ்மித்
4. மார்னஸ் லபுஷேன்
5. ஜோஷ் இங்க்லிஸ்
6. கேமரூன் க்ரீன்
7. கிளென் மேக்ஸ்வெல்
8. மார்கஸ் ஸ்டோய்னிஸ்
9. சீன் அப்பாட்
10. மிட்செல் ஸ்டார்க்
11. ஆடம் ஜம்பா
159 ஆஸ்திரேலியாவுல, 188 இந்தியாவுல - இரண்டிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!