159 ஆஸ்திரேலியாவுல, 188 இந்தியாவுல - இரண்டிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பது இரண்டாவது முறையாகும்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இதில், டிராவிஸ் ஹெட் 5 ரன்களில் சிராஜ் பந்தில் கிளீன் போல்டானார். அதன் பிறகு மிட்செல் மார்ஷ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் ஓவரில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். இந்தக் கேட்சை கேஎல் ராகுல் டைவ் அடித்து பிடித்து அசத்தினார்.
ஒருபுறம் அதிரடியாக ஆடிய மிட்செல், ஜடேஜா ஓவரில் கேட்ச் ஆனார். அவர், 65 பந்துகளில் 5 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் உள்பட 81 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா அடுத்த 8 விக்கெட்டுகளை வெறும் 59 ரன்களில் இழந்தது. இதன் மூலமாக இந்தியாவுக்கு எதிராக 2ஆவது முறையாக குறைந்தபட்ச ரன் எடுத்தது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடந்த 4 ஆவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 159 ரன்கள் எடுத்தது.
கலைஞர் எம் கருணாநிதி ஸ்டாண்டுகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பின்னர் ஆடிய இந்தியா 45.5 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 39 ரன்களும், எம் எஸ் தோனி 17 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். இதே போன்று, நேற்றைய போட்டியில் 189 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்தியா ஆடியது. இதில், தொடக்க வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் குவித்தனர்.
அயர்லாந்து புறப்படும் இந்திய அணி: 3 டி20 போட்டி ரெடி; எப்போது தெரியுமா?
இறுதியாக இந்தியா 39.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், கேஎல் ராகுல் 75 ரன்களும், ஜடேஜா 45 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.