ரூ.7 லட்சத்திற்கு புதிதாக வாட்ச் வாங்கிய விராட் கோலி: வைரலாகும் இன்ஸ்டா பிக்ஸ்!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரூ.7,13,005 மதிப்பில் புதிதாக பிராண்டேடு கைக்கடிகாரம் ஒன்றை வாங்கியுள்ளார்.

Virat Kohli Buys new Santos de Cartier Green Dial Wrist Watch worth Rs.7,31,005

உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர் பட்டாளங்களை கொண்டவர். ஆக்ரோஷத்திற்கு பெயர் போனவர். மைதானத்தில் வேடிக்கை காட்டுவதிலும் வித்தகர். உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவரும் கூட. இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.1050 கோடி ஆகும். ஃபோர்ப்ஸ் வெளியிட்ட உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவர்.

முதல் வெற்றிக்காக போராடும் சேலம் – திருச்சி அணிகள்!

மும்பையில் ரூ.34 கோடியில் ஒரு வீடும், ஹரியானாவில் குருகிராமில் ரூ.80 கோடியில் ஒரு ஆடம்பரமான வீடும் வைத்திருக்கிறார். இதுதவிர விதவிதமான, வகை வகையான ஆடி, ரேஞ்ச் ரோவர், ஃபார்ச்சூனர் கார்களை கொண்டுள்ளார். இந்த நிலையில், இன்ஸ்டா ஸ்டோரியில் புதிதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் புதிதாக தான் வாங்கிய கைக்கடிகாரத்தை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார்.

இங்கிலாந்தை பீதியடையச் செய்த உஸ்மான் கவாஜா: முதல் வீரராக சதம் அடித்து சாதனை!

கடந்த வெள்ளியன்று தனது இன்ஸ்டா ஸ்டோரியில் புதிய சாண்டோஸ் டி கார்டியர் க்ரீன் டயல் (. Santos de Cartier Green Dial) கைக்கடிகாரத்தை ஓலா சாண்டோஸ் என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார். கோலி அணிந்துள்ள அந்த சாண்டோஸ் டி கார்டியர் க்ரீன் டயல் கைக்கடிகாரத்தின் விலை ரூ.7,13,005 ($8,495) ஆகும்.

ஆசிய கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலகக் கோப்பை என மூன்றிலும் தோற்ற டிராவிட் தலைமையிலான இந்திய அணி!

அண்மையில் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடினார். ஒரு கட்டத்தில் இந்திய அணிக்கு வெற்றி தேடிக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி கட்டத்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்தப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது.

உலகக் கோப்பைக்கான 10ஆவது அணி எது? தகுதிச் சுற்றில் 32 போட்டிகள்: நாளை முதல் ஆரம்பம்!

இதையடுத்து, வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதில், விராட் கோலி இடம் பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவர் ஓய்வில் இருந்து குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகிறார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios