முதல் வெற்றிக்காக போராடும் சேலம் – திருச்சி அணிகள்!
டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் பா11சி திருச்சி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகிறன.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் என்று அழைக்கப்படும் டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 8 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. கடந்த 12 ஆம் தேதி தொடங்கிய இந்த லீக் போட்டியின் இறுதிப் போட்டி வரும் ஜூலை 12 ஆம் தேதி முடிவடைகிறது.
இங்கிலாந்தை பீதியடையச் செய்த உஸ்மான் கவாஜா: முதல் வீரராக சதம் அடித்து சாதனை!
ஏற்கனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்று சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் 2 போட்டியிலும் வெற்றி பெற்று 2ஆவது இடத்தில் உள்ளது. லைகா கோவை கிங்ஸ் அணி ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து 4ஆவது இடத்தில் உள்ளது.
ஆனால், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 2 போட்டியிலும் தோல்வி அடைந்து 7ஆவது இடத்திலும், சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி ஒரு போட்டியில் தோல்வி அடைந்து 8ஆவது இடத்திலும் உள்ளது. பா11சி திருச்சி மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் ஒரு ஒரு போட்டிகளில் விளையாடி தோல்வி அடைந்து 5 மற்றும் 6ஆவது இடங்களில் உள்ளன.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கும் போட்டியில் பா11சி திருச்சி மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் தங்களது முதல் வெற்றிக்காக இன்றைய போட்டியில் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய போட்டி முதல் வரும் 22ஆம் தேதி வரையில் நடக்கும் போட்டிகள் அனைத்தும் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பைக்கான 10ஆவது அணி எது? தகுதிச் சுற்றில் 32 போட்டிகள்: நாளை முதல் ஆரம்பம்!