உலகக் கோப்பைக்கான 10ஆவது அணி எது? தகுதிச் சுற்றில் 32 போட்டிகள்: நாளை முதல் ஆரம்பம்!

உலகக் கோப்பையில் இடம் பெறும் 2 அணிகளுக்கான தகுதிச் சுற்று போட்டி நாளை தொடங்குகிறது.

ICC Cricket World Cup Qualifiers 2023 matches starts tomorrow

வரும் அக்டோபர் மாதம் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இதில், 10 அணிகள் இடம் பெறும். ஏற்கனவே 8 அணிகள் தகுதி பெற்ற நிலையில், கடைசியாக இடம் பெறும் 2 அணிகளுக்கான தகுதிச் சுற்று போட்டி நாளை ஜிம்பாப்வேயில் தொடங்குகிறது. இந்தப் போட்டி வரும் ஜூலை 9 ஆம் தேதி தொடங்குகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 இன்னிங்ஸிலும் சதம் அடித்த வங்கதேச வீரர் நஜ்முல் ஷாண்டோ வரலாற்று சாதனை!

ஒரு நாள் உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துவதால், இந்தியா நேரடியாகவே தகுதி பெற்றது. இந்தியாவைத் தொடர்ந்து இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து எஞ்சிய 2 இடங்களுக்கான உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி நாளை தொடங்குகிறது.

வரலாற்றில் சிறப்பான கேட்ச்: பறந்து பிடித்த இங்கிலாந்து வீரர் பிராட்லி ஹர்ரி: குவியும் பாராட்டுக்கள்!

இதில், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, இலங்கை, அயர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து, நேபாளம், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டியிடுகின்றன. குரூப் ஏ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம், அமெரிக்கா ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒரு போதும் ஒரு பந்து வீச்சாளராக மாறவே கூடாது – ரவிச்சந்திரன் அஸ்வின் ஃபீல் அன்ஹேப்பி!

இந்த இரு பிரிவுகளிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோதும். இதில் மொத்தம் 20 போட்டிகள் நடக்கும். அதன் பிறகு இந்த இரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெறும். இதில், ஒவ்வொரு அணியும் விளையாடாத அணிகளுடன் போட்டியிடும். இதில் கடைசியாக இடம் பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு போராடும். இறுதிப் போட்டிக்கு வரும் இரு அணிகளும் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும். உலகக் கோப்பையில் 2 அணிகளும் 9 மற்றும் 10வது இடத்தைப் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

112 அடிச்சு கொடுத்த அஜிதேஷ் குருசுவாமி: வின்னிங் ஷாட் கொடுத்த பொய்யாமொழி: த்ரில் வெற்றி பெற்ற நெல்லை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios