மும்பை புறநகரில் கடற்கரையோர பகுதியான அலிபாக்-கில் விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதி 8 ஏக்கரில் பிரம்மாண்ட வில்லாவை கட்டியுள்ளனர். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி, சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக ஜொலித்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து, புதிய மைல்கற்களை செட் செய்து வருகிறார் விராட் கோலி.

விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் திருமணம்செய்துகொண்டனர். இவர்களுக்கு வாமிகா என்ற மகள் உள்ளார்.

NZ vs IND: முதல் ODI-க்கு வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் லெவன்! ரிஷப்-சாம்சன் ரசிகர்கள் மோதல்

இந்நிலையில், விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதி மும்பையில் தொழிலதிபர்கள், பாலிவுட் நடிகர்கள் என மிகவும் வசதி வாய்ந்தவர்களின் வீடுகள் அமைந்துள்ள மும்பையின் புறநகர் கடற்கரையோர பகுதியான அலிபாக்-கில் 8 ஏக்கர் இடத்தை ரூ.19.25 கோடிக்கு வாங்கி, அங்கு ரூ.13 கோடிக்கு ஒரு பிரம்மாண்ட அழகிய வில்லாவை கட்டியுள்ளனர்.

தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்தது எப்படி? ஏலத்திற்கு முன் தன்னை அணுகிய ஐபிஎல் அணி.! மனம் திறந்த நாராயண் ஜெகதீசன்

விராட் கோலியின் கனவு வில்லாவான இதை வெற்றிகரமாக கட்டி முடித்துள்ளனர். 4 பெட்ரூம்களை கொண்ட நல்ல காற்றோட்ட வசதியுள்ள வில்லாவை கட்டியுள்ளனர். 2 கார் கேரேஜ்கள், 4 பாத்ரூம்கள், அவுட்டோர் டைனிங், நீச்சல்குளம், ஓபன் ஸ்பேஸ் மற்றும் பணியாளர்களுக்கான குவார்ட்ரஸும் அமைந்துள்ளது.