ஃபார்மில் இல்லாத விராட் கோலியை அணியிலிருந்து நீக்காமல் தொடர்ந்து ஆடவைப்பதற்கு அதிருப்திகள் அதிகரித்துவருகின்றன. இதுகுறித்து முன்னாள் ஜாம்பவான் வெங்கடேஷ் பிரசாத்தும் கருத்து கூறியுள்ளார். 

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்துவரும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும், சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கடந்த இரண்டரை ஆண்டாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 

சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் என எந்தவிதமான போட்டிகளிலும் சரியாக ஆடுவதில்லை கோலி. டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க திறமையான இளம் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அருமையாக ஆடி ஸ்கோர் செய்துவருகின்றனர். 

இதையும் படிங்க - 11 வருஷத்துக்கு முன் சூர்யகுமார் யாதவ் குறித்து ரோஹித் போட்ட டுவீட்..! இப்ப செம வைரல்

அதேவேளையில், கோலி தொடர்ந்து சொதப்பிவருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், டெஸ்ட் போட்டியில் சொதப்பியதுடன், டி20 போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பினார். முதல் டி20 போட்டியில் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த நிலையில், 2வது போட்டியில் ஒரு ரன்னும், 3வது போட்டியில் 11 ரன்னும் மட்டுமே அடித்தார்.

கோலி மோசமான ஃபார்மில் உள்ளபோதும், அவரது கடந்த கால பங்களிப்பு என்பதாலும், அவர் உருவாக்கி வைத்துள்ள பிராண்டின் காரணமாகவும் தான் இன்னும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால் கோலியின் பிராண்டுக்காக அவருக்கு வாய்ப்பளித்தால், திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடியாமல் போய்விடுகிறது. டெஸ்ட் போட்டிகளில் அஷ்வினை உட்காரவைக்க முடியுமென்றால், டி20 போட்டிகளில் கோலியை ஏன் உட்காரவைக்கக்கூடாது என்று கபில் தேவ் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கு பின் பேசியபோது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கோலிக்கு ஆதரவாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க - SL vs AUS: 2வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றி

இந்நிலையில், வெங்கடேஷ் பிரசாத்தும் கபில் தேவின் கருத்தையே பிரதிபலித்துள்ளார். வெறும் கடந்த கால பெர்ஃபார்மன்ஸ் மற்றும் பிராண்டுக்காக மட்டும் கோலியை ஆடவைக்கக்கூடாது என்று வெங்கடேஷ் பிரசாத் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள வெங்கடேஷ் பிரசாத், எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் ஃபார்மில் இல்லையென்றால் உட்காரவைப்பது ஒருகாலத்தில் இயல்பானது. கங்குலி, சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் மாதிரியான வீரர்களே கூட, ஃபார்மில் இல்லாமல் உட்காரவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடி நிறைய ஸ்கோர் செய்தபின்னரே, மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுத்தனர். இந்திய அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னரான அனில் கும்ப்ளே கூட பல தருணங்களில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார் என்று வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.