குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அவுட்டாக அவுட்டாக வருத்தமாக வரலட்சுமி சரத்குமார் ரியாக்‌ஷன் கொடுத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் குவாலிஃபையர் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.

விஜய் சங்கரை மான்கட் முறையில் ஆட்டமிழக்க முயற்சித்த தீபக் சாஹர் – கூலாக சிரித்த எம்.எஸ்.!

சென்னை போட்டி என்றால் சினிமா செலிபிரிட்டி இல்லாமல் இருக்காது என்று சொல்லும் அளவிற்கு நேற்றைய போட்டியில் சினிமா பிரபலங்கள் பலரும் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்தனர். அதில், வரலட்சுமி சரத்குமார், ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா என்று ஏராளமான பிரபலங்கள் வந்திருந்தனர். அப்போது சிஎஸ்கே வீரர்கள் ஒவ்வொருவரும் ஆட்டமிழக்கும் போது வரலட்சுமி சரத்குமார் வருத்தமாக ரியாக்‌ஷன் கொடுத்துள்ளார். இது மைதானத்தின் கேமராவில் காண்பிக்கப்பட்டது.

கோட்டையில் வரலாற்றை மாற்றியமைத்து 10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்ற சிஎஸ்கே!

இதைத் தொடர்ந்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சிஎஸ்கே வெற்றி பெற்றதும் மைதானத்தில் ஆ, ஊ என்று வரலட்சுமி சரத்குமார் உற்சாகமாக கத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Scroll to load tweet…

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்று வரலாற்றை மாற்றியமைத்து 10ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. வரும் 28 ஆம் தேதி அகமதாபாத்தில் இறுதிப் போட்ட்டி நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி எனது நண்பர், சகோதரர்; நான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன் - ஹர்திக் பாண்டியா!

Scroll to load tweet…

Scroll to load tweet…