பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் என சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை கொண்டிருப்பதால், கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி ஃபாஸ்ட் பவுலிங்கில் மிரட்டுகிறது. 

மேலும் நவ்தீப் சைனி, தீபக் சாஹர் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்களும் சிறந்து விளங்குவதால் அவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா, ஷமி, உமேஷ், இஷாந்த் சர்மா ஆகியோர் ஆடிவருகின்றனர். இவர்களில் பும்ரா, ஷமி ஆகிய இருவர் மட்டுமே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுகின்றனர். பும்ரா மற்றும் ஷமி ஆகிய இருவரும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் பிரதான ஃபாஸ்ட் பவுலர்கள்.

இவர்களுடன் நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு ஆடிவருகின்றனர். உமேஷ் யாதவுக்கு ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம் கிடைப்பதில்லை. உமேஷ் யாதவ், கடைசியாக 2018ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டி20 போட்டியிலும் ஆடினார். எனவே ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் அவர் இடம்பெற்று ஆடி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. 

டெஸ்ட் அணியில் தொடர்ந்து இடம்பெற்று ஆடிவரும் உமேஷ் யாதவ், ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலும் இடம்பெற முயற்சித்துவருகிறார். அதற்காக தீவிரமாக உழைத்தும் வருகிறார். 

இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து பேசியுள்ள உமேஷ் யாதவ், மைதானத்திற்கு வெளியே உட்கார வேண்டும் என்று யார் விரும்புவார்..? யாருமே விரும்பமாட்டார்கள். நானும் மனிதன் தானே. நான் உண்மையாக கடுமையாக உழைத்து வருகிறேன். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஆட மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று உமேஷ் யாதவ் தெரிவித்தார். 

Also Read - நல்லா வீசிகிட்டு இருந்த ஷமியை விட்டுட்டு சூப்பர் ஓவரை பும்ராவை வீசவைத்தது ஏன்..? ரோஹித் சர்மா விளக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்நோக்கியிருப்பதாகவும், 2015 உலக கோப்பையில் இந்திய அணிக்காக ஆடியதற்கு பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதாகவும் 2019 உலக கோப்பை அணியில் புறக்கணிக்கப்பட்டது மிகவும் வருத்தமளித்ததாகவும் உமேஷ் யாதவ் தெரிவித்தார்.