காதலியை கரம் பிடித்த சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டே: பந்து மீது மோதிரம் வைத்து நிச்சயதார்த்தம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே தனது நீண்ட நாள் காதலியான நபா கட்டம்வார் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பதினாறாவது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இதில், இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் மழை குறுக்கீடு காரணமாக முதல் நாள் நடக்க இருந்த இறுதிப் போட்டி ரிசர்வ் டே என்று சொல்லப்படும் மறுநாள் நடந்தது. இதில் முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.
இது 6ஆவது முறை: அஸ்வினைப் போன்று யாரும் மோசமாக நடத்தப்படவில்லை – சுனில் கவாஸ்கர்!
இதையடுத்து சிஎஸ்கே அணி முதலில் ஆடியது. அப்போது மழை குறுக்கீடு இருந்த நிலையில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக அதிரடியாக ஆடிய சிஎஸ்கே அணி கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தது. இந்த வெற்றியின் மூலமாக சிஎஸ்கே அணி 5ஆவது முறையாக சாம்பியனானது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே தனது சிறப்பான பந்து வீச்சின் மூலமாக 16 போட்டிகள் விளையாடி 21 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தோனி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம்!
இந்த சீசனில் சிஎஸ்கே வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களில் துஷார் தேஷ்பாண்டேயும் ஒருவர். ஐபிஎல் 16ஆவது சீசன் முடிந்த நிலையில், துஷார் தேஷாண்டே தனது நீண்ட நாள் காதலியான நபா கட்டம்வாரை நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை பந்தின் மீது வைத்து எடுத்து வந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
TNPL 2023: கடைசி வரை போராடிய துஷார் ரஹேஜா: ஓபனிங் மேட்சிலேயே 70ல் ஜெயிச்ச லைகா கோவை கிங்ஸ்!
ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றதை தனது காதலியோடு சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. துஷார் தேஷ்பாண்டே மற்றும் நபா கட்டம்வார் திருமண நிகழ்ச்சியில் சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே தனது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த வாரம் சிஎஸ்கேயின் மற்றொரு வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் உத்கர்ஷா பவார் இருவரும் தென்னிந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.